மார்க்கை தாண்டியது பிட்காயின்.. 1 லட்சம் டாலரை தொட்டது 1 பிட்காயின் மதிப்பு.. இனி எல்லாம் இதுதான்
சென்னை: பிட்காயின் மதிப்பு தற்போது 1 லட்சம் டாலரை தொட்டுள்ளது. 90 ஆயிரத்தில் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் தற்போது 1 லட்சம் டாலரை தொட்டுள்ளது.
உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.

இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
தற்போதைய சந்தை நிலவரப்படி பிட்காயின் மதிப்பு தற்போது 1 லட்சம் டாலரை தொட்டுள்ளது. 90 ஆயிரத்தில் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் தற்போது 1 லட்சம் டாலரை தொட்டுள்ளது.
இதனுடைய மதிப்பு 8472651.97 ரூபாய் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 85 லட்சம் ரூபாய். கடந்த சில வருடம் முன் இதன் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே இருந்தது. ஆனால் சில வருடங்களில் வருடத்தில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 டாலர் வரை இது உயர்ந்தது. இடையில் சில நாள் வீழ்ச்சியும் அடைந்தது.
பிளாக் செயின்: பிளாக் செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது . உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும் இது. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் ஆகும் இது. உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
என்ன நடக்கிறது?: Bitcoin இன் விலை வரலாற்றில் முதன்முறையாக இதன் மூலம் $100,000 ஐ எட்டடி உள்ளது. இப்போது சரியாக $101,354 என்ற மதிப்பில் உள்ளது. நவம்பர் 12 அன்று $90,000 என்ற நிலையை எட்டிய சில வாரங்களில் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பிட்காயினுக்கு ஆதரவானர்.
அந்த நாட்டு அரசு தங்கள் ரிசர்வில் பிட்காயினை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரும் தீவிரமாக பிட்காயின் ஆதரவாளர் என்பதால் அதன் மதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications