திருடர்னு முதல்வர் சொன்ன செந்தில் பாலாஜி தியாகி ஆயிட்டாரு.. பாஜக பிடியில் விஜயா? வானதி சொன்ன விஷயம்!
கோவை: தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு எனவும், நாட்டில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் திருடர் என கூறினார். தற்பொழுது செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு தியாகி என குறிப்பிடுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டிடக்கலை வல்லுனர்கள் குழுமம் சார்பில் கட்டிடக்கலை கண்காட்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது பிரதமர் மோடியின் சிந்தனையில் உருவான அற்புதமான திட்டம். இந்தியாவிலேயே அதிகமான ஸ்மார்ட் சிட்டிகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதிலும் கோவையில் ஏழு குளங்கள் சீரமைக்கட்டும் மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வானதி சீனிவாசன்
28ஆம் தேதி துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாஜக மற்றும் தனியார் அமைப்பு செய்து வருகிறது. தமிழக பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, பல்கலைக்கழக நிலப்பரப்பை குறைத்து தான அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தார்கள்.
பாஜக பதில்
தேசிய கல்விக் கொள்கையை ஒரு புறம் எதிர்க்கிறார்கள். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்து புதிதாக கல்வி கொள்கை திட்டத்தில் செயல்படுத்துகிறோம் என்று திராவிட மாடல் அரசு கூறுகிறது. தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று மாநாடு நடத்துகிறார்கள். ஆனால் அதேசமயம் பல்வேறு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகிறது. சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் அரசாங்கத்தில் சமூக நல நீதி விடுதிகள் மூடப்பட்டு வருகிறது. அதுதான் அவர்களது சாதனை.
விஜய் கரூர்
ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முன்பு கலந்துரையாடிக் கொண்டு வர வேண்டும். அவசரகதியில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதும் அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எல்லாம் கூறியதை அடுத்து அதனை வாபஸ் பெறுவதுமாக டிராமா அரசை நடத்த வேண்டாம். தமிழக வெற்றிக் கழக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மற்றவர்கள் கூறி கருத்துக்குள்ளே செல்ல விரும்பவில்லை.
தவெக விவகாரம்
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் தான். சிபிஐ விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் பொழுது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற கருத்து அபாண்டமான குற்றச்சாட்டு. நாட்டில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம்.
திராவிட மாடல்
நெல் கொள்முதல் குறித்தான கேள்விக்கு மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதால் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். டெல்டாக்காரர் என்று முதல்வர் கூறி வரும் பொழுது டெல்டா விவசாயிகள் அதற்கு பதில் அளிக்க 2026 ஆம் ஆண்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். PM SRI திட்டத்தில் தமிழ்நாடு கூடிய விரைவில் இணையும், கேரள மாநிலம் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று ஏற்றுக் கொண்டார்கள். தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொள்கின்ற காலம் நிச்சயம் வரும்.
செந்தில் பாலாஜி
விமர்சனங்கள் செய்வதால் ஒவ்வொரு கட்சியின் கூட்டணிக்கு வருவதில்லை என்று கூறினால் தற்பொழுது எந்த கட்சியின் கூட்டணிக்கு வராது. செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் திருடர் என கூறினார். தற்பொழுது செந்தில் பாலாஜி திமுக கட்சியில் இணைந்த பிறகு தியாகி என குறிப்பிடுகிறார். அரசியலில் மாறி மாறி பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது வருத்தமாக தான் உள்ளது. ஆனால், அவ்வாறு பேச வேண்டிய சூழல் இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications