மறுபடியும் போட்டோ ஷாப்பா? குரூப் போட்டாவும் வானதி சீனிவாசன் விளக்கமும்..!
சென்னை: பாஜக மகளிரணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் நவம்பர் 6-ம் தேதி வெளியிட்டுள்ள ஒரு குரூப் போட்டோ, நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
அதன் விவரம் என்னவென்றால், 'பாஜக குடும்ப உறுப்பினர்களுடன் நான்' என்ற தலைப்பில் வானதி வெளியிட்டுள்ள அந்த புகைப்படமும், பாஜகவின் மற்ற நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அந்த குழு புகைப்படமும் மாறுபட்டிருப்பது தான்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மழை வெள்ளத்தை ஆய்வு செய்ய சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில், இப்போது வானதி சீனிவாசனின் குழு புகைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

போட்டோஷாப்
போட்டோஷாப் மூலம் குரூப் போட்டோவில் வானதி சீனிவாசன் படம் இணைக்கப்பட்டது குறித்து அவரிடமே நாம் பேசினோம். இது குறித்து விளக்கம் அளித்த அவர், ''நான் டெல்லிக்கு சென்றது உண்மை தான். பாஜக அலுவலகத்தில் இருந்து 40 நிர்வாகிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்துகொள்வதற்காக சென்றோம். அப்போது அங்கு குழு புகைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், நான் கொஞ்சம் தாமதாமாக வந்தேன்.''

வானதி விளக்கம்
''இதனால் என்னால் அந்த குழு புகைப்படத்தில் நிற்க முடியவில்லை. நிர்வாகிகளும் பேருந்தில் ஏறிவிட்டதால் மீண்டும் அவர்களை கீழிறக்கி குழு புகைப்படம் எடுக்கவிரும்பவில்லை. இதனிடையே மெமரீஸ்காக இந்த படம் முக்கியம் எனக் கூறிய புகைப்பட கலைஞர் என்னை தனியாக போட்டோ எடுத்து அதை குழு புகைப்படத்துடன் இணைத்து எனக்கு அனுப்பி வைத்தார். இவ்வளவு தான் நடந்தது.''

டெல்லி சென்றது உண்மை
''ஏதோ நான் டெல்லிக்கே செல்லாததை போல் ஒரு சிலர் திரித்துக் கூறி வருகின்றனர். இப்படி எனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் கிடையாது. புகைப்பட கலைஞரின் கட்டாயத்தால் தான் இந்தப் படத்திற்கு ஒப்புக்கொண்டேன். மொத்தத்தில் நான் டெல்லி சென்றதும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டதும் உண்மை'' என விளக்கம் அளித்தார்.

விமர்சனம்
இதனிடையே வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ள அந்த குழு புகைப்படத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். வீடியோஷூட், போட்டோஷாப் என தமிழக பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications