என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது -வானதி சீனிவாசன்
திருச்சி: அரசியலை பொறுத்தவரை எதுவும் நிரந்தரம் கிடையாது என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணியில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
மேலும், வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜக தமிழகத்தில் வெற்றிபெற வியூகம் அமைத்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

கூட்டணி விரிசல்
அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி உறவு சுமூகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு அந்தக் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக மேலிடம் அறிவிக்கும் என தமிழக பாஜகவினர் மாறி மாறி பேட்டிக் கொடுக்க அது அதிமுகவை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.

நிர்வாகிகள் பேட்டி
ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேட்டியளிப்பதற்கு முன்பு வரை அதிமுக-பாஜக கூட்டணியில் பெரியளவில் விரிசல் இல்லை. எப்போது அவர் கட்சி தொடங்குகிறேன் என்றும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என அறிவித்தாரோ அன்று முதலே பாஜகவுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. நிர்வாகிகளின் பேட்டிகளிலும் வித்தியாசத்தை உணர முடிகிறது.

முதல்வர் வேட்பாளர்
இதனிடையே திருச்சியில் பேட்டியளித்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை என்றும் இதனால் தான் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என கூற வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

நிரந்தரமில்லை
தங்களை பொறுத்தவரை வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றிபெற்று உறுப்பினர்களை சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருப்பதாக கூறினார். மேலும், அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது என்றும் எந்தக் கூட்டணி நிரந்தரம் என்று யாரும் சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications