ஹஹாஹா..வட இந்தியர்கள் 20,000 பேர் எனக்கு ஓட்டு போட்டார்களா?சீமான் கருத்துக்கு வானதி சீனிவாசன் பதில்
வட இந்தியர் வாக்குகளால் வென்றதாக சீமான் கூறியதற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மொத்தம் 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; அந்த 20,000 வாக்குகளுமே வட இந்தியர்கள் போட்ட வாக்குதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதை மறுத்துள்ளார் வானதி சீனிவாசன்.
புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை டிவிக்கு சீமான் அளித்த பேட்டியில் வட இந்தியர் தொடர்பாக கூறியதாவது: நீ நீயாக இரு.. உன் கலாசாரம், பண்பாட்டுடன் இரு. நான் நானாக இருக்கிறேன். எல்லோரும் மொழிவழி மாநிலம் பிரிந்து போய்விட்டீர்கள். எனக்கு இந்த ஒரு நிலம்தான் இருக்கு. இந்த நிலத்தின் அதிகாரத்தை எனக்கு கொடுத்துப் பார். நான் என் நிலத்தைப் பாதுகாப்பேன். தெருக்களில் தமிழ் இருக்கிறதா? என் மொழி செத்து போயிருச்சு.

ஆந்திரா காட்டுக்குள் 20 பேரை சுட்டுக் கொன்றார்களே.. அப்போது நீங்கள் எனக்காக பாவம் என்று பேசினீர்களா? 20 மீனவரை ஒரே சங்கிலியில் இழுத்துக் கொண்டு போன போது யாரேனும் என் மீனவனுக்காக பேசினார்களா? செம்மரக் கட்டை வெட்ட வந்தவர்கள் என கூறி ஆந்திராவில் ஆயிரக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். செம்மரம் வெட்ட வந்த கூலி தமிழன் எனில் வெட்ட சொன்ன முதலாளி யார்? அவனை ஏன் கைது செய்யவில்லை இதனை யாரும் தட்டிக் கேட்டார்களா? இந்த அதிகாரம் கேட்கவில்லை.. நான் முதல்வராக இருந்தால் என் தமிழ் பிள்ளைகளை யாரேனும் தொட முடியுமா? தமிழ்நாட்டில் ஒன்றரை கோடிப் பேர் வட மாநிலத்தவர் இருப்பது உண்மை. அவர்களில் 75 லட்சம் பேருக்கு வாக்குரிமை கிடைத்துவிட்டது. இப்ப அம்மா வானதி சீனிவாசன் கோவையில் வெல்றாங்க.. அந்த தொகுதியில் 20,000 வாக்கு வித்தியாசம். 20,000 வாக்கும் வட இந்திய வாக்கு. அவங்க பிஜேபி ஓட்டர்ஸ்.. அதனால் பேசமாட்டாங்க. காங்கிரஸ் வாக்கும் இல்லை. திராவிட கட்சிக்கும் இல்லை. சுத்தமாக எனக்கும் இல்லை. அவன் யாருக்கு போடுவான்?. இவ்வாறு சீமான் கூறியிருந்தார்.

ஆனால் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக சீமான் சொல்வது உண்மைக்கு மாறானது என நெட்டிசன்கள் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு அனைவரும் கவனித்த நட்சத்திர தொகுதி. மேலும் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், பாஜக வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசம்தான் இருவருக்கும் இடையே இருந்தது. இறுதியாக 1728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வானதி சீனிவாசன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. வானதி சீனிவாசனுக்கு மொத்தம் 53,209; கமல்ஹாசனுக்கு மொத்தம் 51,481 வாக்குகள் கிடைத்தன. வானதி சீனிவாசனுக்கும் கமல்ஹாசனுக்குமான வாக்கு வித்தியாசம் 1728 என்பதை 20,000 என சீமான் கூறியது கேள்விக்குள்ளானது.
இந்நிலையில் தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சீமான் கருத்துக்கு நகைப்புடன் பதிலளித்துள்ளார். அதில், சீமான் சொல்வது போல 20,000 பேர் எல்லாம் இல்லை. ஒரு 4,000- 5,000 வட இந்தியர்கள் என் தொகுதியில் இருப்பார்கள். பல்வேறு துறை சார்ந்தவர்கள். மாநில பிரிவினைக்கு முன்னரே பல தலைமுறைகளாக இங்கே குடியேறி இருக்கின்றனர். பெங்களூர் எம்ஜி ரோட்டில் பெரும்பாலான சொத்துகள் தமிழர்களுடையதாக இருக்கும். சீமானின் இந்த கருத்து மூலம் அவரது கற்பனை வளம் வெளிப்பட்டிருக்கிறது. சீமானின் கற்பனை வளம் பொதுவாகவே அதிகமாக இருக்கும். ஒரு சினிமா இயக்குநர் என்பதால் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். என் தொகுதியைப் பொறுத்தவரை அதிக கற்பனை வளம் கொண்டவராக சீமான் இருக்கிறார் என சிரித்தபடியே பதில் தந்தார் வானதி சீனிவாசன்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications