இன்று திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா.. மக்கள் பார்வையிட அனுமதி!
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றில் இருந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 1600க்கும் குறைவாகவே கேஸ்கள் பதிவானது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளும் அமலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 50 சதவிகித இருக்கைகள் அனுமதியுடன் சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாநிலம் முழுக்க பூங்காக்களும் திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால் நேற்று திறக்கப்பட வேண்டிய வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு தங்களுக்கு வரவில்லை என்பதால் அதிகாரிகள் இந்த பூங்காவை திறக்காமல் இருந்தனர். இதனால் பூங்காவை காண வந்த பலர் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.
ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு பலியானது. அதன்பின் மேலும் 7 சிங்கங்கள் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது. இதனால் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.
தற்போது பூங்காவில் விலங்குகள் எந்த நோயும் இன்றி பாதுகாப்பாக உள்ள நிலையில் பூங்கா இன்றில் இருந்து திறக்கப்படும் என்று இணை இயக்குனர் காஞ்சனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று காலையில் இருந்து மக்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications