வண்டலூரே டோட்டலா மாறுதே.. உயிரியல் பூங்காவை பார்த்தீங்களா.. வந்துவிழுந்த "டபுள்" ஷாக்.. இது எப்போ?
சென்னை: இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில் சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
வண்டலூர் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும்.. கடந்த 1855ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர்.. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்திருந்தார்கள்.
பூங்கா: அதற்கு பிறகுதான், விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள். எப்படியும் ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்... அதுவும் லீவு நாட்கள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.
டிக்கெட் கட்டணம்: இந்த பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.. இனி இந்த கட்டணம் ரூ.200 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது கட்டணம் அப்படியே டபுள் ஆகப் போகிறது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கும் வரப்போகிறதாம்.. அதேபோல, பூங்காவுக்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர கட்டணம் ரூ.1550 ஆகும்..
இந்த திடீர் கட்டண உயர்வுக்கு காரணம், விலங்குகளின் சாப்பாட்டுக்கே ரூ.6 கோடிக்கு மேல் ஆகிறதாம்.. அத்துடன் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது என்கிறார்கள்... மேலும், விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.. இதைத்தவிர, காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்கு திரைகள் போன்றவை அதிகமாக இடம் பெற உள்ளதாகவும் தெரிகிறது. அதனால்தான், இந்த கட்டண உயர்வு என்கிறார்கள்.
கட்டணம் அதிகம்: அதுமட்டுமல்ல, இந்த கட்டண உயர்வின் மூலம் பூங்காவை இன்னும் சிறப்பாக பராமரிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். கடந்த 4 வருடங்களாகவே கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், இப்போது, கட்டண உயர்வு அதிகரிக்கப்பட உள்ளது.. எனினும், ஒரேயடியாக டபுள் மடங்கு கட்டணம் எகிறியுள்ளது சற்று அதிகம் என்கிறார்கள் பொதுமக்கள்..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications