தென் மாவட்ட பயணிகளின் கனவுங்க.. வந்தே பாரத் ரயிலில்.. தீபாவளி பரிசு கொடுக்கும் தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை டூ நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. எனினும் அனைத்து நாட்களிலும் ரயிலில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விடுவதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட 7 ரயில்களில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன் முதலாக நாட்டில் வந்தே பாரத் ரயில் டெல்லி - வாரணாசி இடையே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்
எக்ஸ்பிரஸ் ரயில்களை விட அதிவேக பயணம், பல்வேறு சொகுசு வசதிகள், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு என்ற பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. மேலும் தமிழகத்திற்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை டூ நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 பெட்டிகளுடன் சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் என இருமார்க்கமாகவும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. முதலில் 8 பெட்டிகளோடு மட்டுமே இயக்கப்பட்டதால், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்த வண்ணம் இருந்தது. பலருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை என புகார்களும் வந்தன.
20 பெட்டிகளாக இயக்கப்படும்
இதனால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டது. இதன்படி நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலானது 16 பெட்டிகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. வண்டி எண் 20665 / 20666 ஆகிய எண்களில் இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலானது 7 மணி 50 நிமிடங்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. எனினும் தற்போதும் ரயில்களில் சீட் கிடைக்கவில்லை எனவும், பண்டிகை காலங்களில் மேலும் புக் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், எனவே இன்னும் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்க கோரிக்கை வைத்து வந்தனர்.
தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள்
இந்த நிலையில் தான் பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத் - திருப்பதி ரயில்களிலும் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இதேபோன்று 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் மதுரை - பெங்களூர் கான்ட், தியோகர் - வாரணாசி, ஹவுரா - ரூர்கேலா மற்றும் இந்தூர் - நாக்பூர் ஆகிய ரயில்களில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்த்து மொத்தம் 16 பெட்டிகளாக இயக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி, ஆயுத பூஜை, தேர்வு விடுமுறை, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதாலும் தென் மாவட்ட பயணிகளுக்காக இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மகிழ்ச்சி
ரயில்வேயின் இந்த அறிவிப்பு தென் மாவட்ட பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலானது, வாரத்தில் செவ்வாய்க்கிழமையை தவிர்த்து மற்ற ஆறு நாட்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கட்டணமாக சேர் காரில் ரூ.1,680 என்றும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் ரூ.3,065 என்றும் வசூல் செய்யப்படுகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications