விஜயவாடா டூ சென்னை.. செப்.24 இல் வந்தே பாரத் ரயில் தொடக்கம்.. தமிழகத்திற்கு கிடைக்கும் 4வது சேவை
சென்னை: விஜயவாடாவிலிருந்து சென்னை இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 24 ஆ தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.

நெடுந்தூரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளததை 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது.
நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலானது கடந்த 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த தகவலை தெற்கு ரயில்வே மறுத்தது.
தமிழகத்தில் சென்னை டூ பெங்களூர், சென்னை டூ கோவை ஆகிய இரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 3ஆவது ரயிலாகவும் தென் மாவட்டங்களை இணைக்கும் முதல் ரயிலாகவும் அமைய போகும் நெல்லை- சென்னை வந்தே பாரத் எப்போது தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இந்த ரயிலை வரும் 24 ஆம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்டோர் செய்திருந்தனர். வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவிற்கான மேடை அமைக்கும் இடம், ரயில் வந்து செல்லும் நடைமேடை, ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக் கூடிய பிட் லைன், ரயில் முன்பதிவு கவுன்டட்ர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை- சென்னை இடையே வந்த பாரத் ரயில் வரும் 24 ம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன் தினம் இரவு தென்னக ரயில்வேக்கு கிடைத்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நெல்லை ரயில் நிலையத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி செப்டம்பர் 24 ஆம் தேதி மொத்தம் 9 ரயிலை தொடங்கி வைக்கிறார். அதில் விஜயவாடா டூ சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில்.
விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு 6 மணி நேரம் 40 நிமிடங்களில் வந்தே பாரத் வந்து செல்லும். இந்த ரயில் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயவாடா டூ சென்னை இடையே தொடங்கப்படும் வந்தே பாரத் தமிழகத்திற்கு கிடைத்த 4ஆவது ரயிலாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications