இருக்கை மட்டும் போதுமா? வந்தே பாரத் ரயிலில் மிகப்பெரிய மாற்றம்.. மக்களுக்கு குஷியோ குஷி.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

Vande Bharat Train to get sleeper coaches soon as manufacturing started already

இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய விதிகள்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் அந்த ரயிலுக்கு என்று இருக்கும் முக்கியமான சில விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். 1. இந்த ரயிலில் எந்த விதமான சலுகை கட்டணமும் கிடையாது. குழந்தைகளுக்கு குறைந்த கட்டணம் கிடையாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். 2. இந்த ரயிலில் மூத்த குடிமக்கள் / திவ்யாங் / பத்திரிகையாளர் சலுகை டிக்கெட் முன்பதிவு கிடையாது.

3. வந்தே பாரத் ரயில்களுக்கான முன்பதிவு, ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகிய விதி முறைகள் சதாப்தி ரயில்களுக்கான விதிகளை போலவே இருக்கும். 4. முன்பதிவு செய்யும் கேட்டரிங் சேவைகளை தேர்வு செய்ய முடியும். 5. முன் கூட்டியே கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாத ஒரு பயணி, பின்னர் அதே வந்தே பாரத் ரயிலில் உணவை வாங்க முடிவு செய்தால், சாதாரண கேட்டரிங் கட்டணங்களுடன் கூடுதலாக ரூ.50/- கட்டணம் செலுத்தி உணவு பெறலாம்.
.
6. பொது மற்றும் தட்கல் கோட்டாவைத் தவிர வேறு எந்த கோட்டா இல்லை. 7. . எம்.பி.க்கள், எம்.எல்.ஏ கூப்பன்கள், பிற கூப்பன்கள், ராணுவ/பாராமிலிட்டரி வாரண்ட்கள் போன்றவற்றின் பாஸ்கள், ரயில்வே துறைக்கு முழுமையாக திருப்பிச் செலுத்தக்கூடிய கட்டணத்துடன் கூடிய பாஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 8. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் காலை உணவுக்கான விலை ரூ. 205. பிற்பகல் உணவு ரூ. 205. மாலை நேர சிற்றுண்டி ரூ. 155. இரவு நேர உணவு ரூ 294. இதன் மேல் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.

9. இந்த ரயிலில் மொத்தமாக பல்க் முன்பதிவு செய்ய முடியும். 10. ரயில்வே ஊழியர்களுக்கான பாஸ்களில் பிரத்தியேகமாக டிக்கெட் முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது. 11. ரயிலில் ஊழியர்களுக்கான பாஸ் தவிர மற்ற ரயில்வே தொடர்பான பாஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+