வந்தே பாரத் ரயிலை தரதரவென.. இழுத்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின்.. என்ன கொடுமை இது? ஷாக் வீடியோ
சென்னை: வந்தே பாரத் ரயில் ஒன்றை சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் எஞ்சின் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது.

சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
இது போக சென்னை டூ நெல்லை, கோவை டூ மதுரை ஆகிய மாவட்டங்களுக்கும் விரைவில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் வந்தே பாரத் ரயில்களில் தண்ணீர் லீக் ஆகும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
எஞ்சின்: வந்தே பாரத் ரயில் ஒன்றை சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் எஞ்சின் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வந்தே பாரத் ரயிலின் முன்பக்கம் வேறு சாதாரண ரயிலின் எஞ்சின் உள்ளது.
அது வந்தே பாரத் ரயிலை இழுத்து செல்கிறது. வந்தே பாரத் ரயில் எஞ்சினுக்கு ஏதாவது பிரச்சனையா? அல்லது மாடு முட்டுவதை தவிர்க்க இப்படி பழைய எஞ்சினை பயன்படுத்துகிறீர்களா என்று நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். இதற்கு ரயில்வே கொடுத்த விளக்கத்தில், இது பழைய வீடியோ. வந்தே பாரத் ரயில் பயணம் எல்லாம் தொடங்கும் முன் அதன் பெட்டிகளை சோதனை செய்ய நடத்தப்பட்ட சோதனை ஓட்டம்.
அதில் பயணிகள் இல்லை. வந்தே பாரத் ரயிலின் பயணம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க இந்த சோதனை ஓட்டம் நடந்தது. அதுதான் இந்த வீடியோ என்று விளக்கி உள்ளனர்.
லீக்காகும் தண்ணீர்: சில நாட்களுக்கு முன் கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.
ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 8 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகும். முதல் நாள் பயணத்தில் இது சரியாக 8 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 68 கிமீ வேகத்தில்தான் இந்த ரயில் பயணம் செய்தது.
இந்த ரயிலில் சென்றால் விரைவாக சென்றுவிட முடியும் என்று நினைத்த பயணிகள் பலரும் பயண நேரத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கூடுதல் அதிர்ச்சியாக கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலில் நேற்று முதல்நாள் மழையில் நீர் ஒழுகிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ரயிலின் மேல் பாகத்தில் இருந்து இப்படி நீர் ஒழுகி உள்ளது. மழை காரணமாக உள்ளே நீர் வந்து உள்ளது. ரயிலின் executive கோச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் கண்ணூர் வந்ததும் அதன் சீலிங்கில் இருக்கும் விரிசல் சரி செய்யப்பட்டு உடனே மாற்றப்பட்டது.
Double-engined Vande Bharat Expresspic.twitter.com/iQWcECeWHj
— Ravi Nair (@t_d_h_nair) June 29, 2023
இந்த பாதிப்பால் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. அதே சமயம் ரயிலில் நீர் ஒழுகிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர் சம்பவங்கள்: மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் ரயிலில் சில நாட்களுக்கு முன்பு திடீரென மேற்பகுதியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலை (ICF) வடிவமைப்பு வந்தே பாரத் ரயிலில் சிறிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளத.
தொழிற்சாலையின் பொது மேலாளர் உட்பட அதிகாரிகள் குழு மும்பைக்கு சென்று ரயிலில் சோதனை செய்து உள்ளனர். சரி செய்ய வேண்டிய குறைபாடுகளைக் கண்டறிந்து உள்ளனர். இதையடுத்து ரயிலில் தண்ணீர் சேகரிக்கப்படும் பகுதிகளில் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மாற்றங்கள் செய்யப்பட்ட பின் வந்தே பாரத் ரயிலில் கசிவு இருக்காது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications