காட்பாடியின் கனவு சார்.. வேலூருக்கு வந்த வாழ்வு.. 100 கிமீ வேக வந்தே மெட்ரோ ரயிலில் இவ்வளவு வசதிகளா?
சென்னை: மணிக்கு 100 கி.மீ வேகத்தில் 12 பெட்டிகள் கொண்ட சென்னை கடற்கரை - காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த ரயிலில் குளிர்சாதன வசதியும் நவீன கழிவறை வசதியும் உள்ளது.
சென்னை கோட்ட ரெயில் இயக்க மேலாளர், இன்று காலை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட "வந்தே மெட்ரோ" ரெயில் இயக்கப்பட உள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து வந்தே மெட்ரோ ரெயில் கடற்கரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9.10 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கும். பின்னர் வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காலை 11.55 மணிக்கு காட்பாடி செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். இந்த நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தை தயார் நிலையில் வைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே மின்சார ரயில் ரத்து : ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இன்று மற்றும் 5ம் தேதிகளில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் ஆவடி பணிமனையில் இன்று (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி இரவு 12 மணி முதல் காலை 3.30 மணி வரை (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பட்டாபிராமிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், சென்னை சென்ட்ரலில் (மூர் மார்க்கெட்) இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 12 15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், ஆவடியிலிருந்து காலை 3 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரயிலும் நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி ஆவடி - பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, பட்டாபிராமிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி ஆவடி - பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
மேலும், பட்டாபிராமிலிருந்து காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரயில் இன்று (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி பட்டாபிராம் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications