பிரபல பாடகி வாணி ஜெயராம் மர்ம மரணமாக காவல் துறை வழக்குப் பதிவு.. ரத்த வெள்ளத்தில் இறந்தது எப்படி?
பிரபல பாடகி வாணி ஜெயராமின் மரணம் மர்ம மரணமாக வழக்குப் பதிவு
சென்னை: பிரபல திரைப்பட பாடகி வாணி ஜெயராம் இறந்த நிலையில் அவரது இறப்பு மர்ம மரணமாக போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளது வாணி ஜெயராமின் வீடு. இங்கு அவர் தனியே வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பணிப்பெண் மலர்க்கொடிி என்பவர் வந்துள்ளார். காலை 10.30 மணிக்கு வந்த அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் வாணி ஜெயராம் திறக்கவில்லை.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு மலர்க்கொடி தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் வாணி ஜெயராமின் சகோதரி உமாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் அவர் அங்கு எடுத்து வந்த கூடுதல் சாவி மூலம் வாணி ஜெயராமின் கதவு திறக்கப்பட்டது.

வாணி ஜெயராம் தலையில் காயம்
உள்ளே போய் பார்த்த போது வாணி ஜெயராம் தலையில் அடிபட்டவாறு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை போலீஸார் இயற்கைக்கு மாறான மரணமாக பதிவு செய்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு நடத்தப்படுகிறது. தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

போலீஸார் கூறுவது என்ன?
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஆரம்பத்தில் அவர் கீழே தவறி விழுந்து அங்கிருந்த டேபிளில் இடித்துக் கொண்டிருக்கலாம் என்றுதான் நாங்கள் கருதினோம். ஆனால் அவருடைய முன்னந்தலையில் காயம் இருந்தது. எனவே இந்த மரணத்தை இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர். அக்கம்பக்கத்தாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் யாரேனும் சந்தேகத்திற்கு இடமான நபர்களை பார்த்தீர்களா என்றும் போலீஸார் கேட்டு வருகிறார்கள்.

முதல் பாடல்
இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகும். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. சுமார் 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

50 ஆண்டுகள்
கிட்டதட்ட 50 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வந்தார். இதுவரை பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை 3 முறை பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்தும் விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருதுகளை வாங்கி குவித்த வாணி ஜெயராம், நாடு முழுவதும் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பத்ம விருதுகள் கிடைத்தவுடன் தனது பாடலை 50 ஆண்டுகளாக கேட்டு வரும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என வாணி ஜெயராம் தெரிவித்திருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் வாணி ஜெயராம் பாடும்போது சங்கதிகளை முடிவு செய்ய மாட்டார், ஆனால் அவர் பாடும் போது சங்கதிகள் தானாக அமைந்துவிடும்.

சிவசங்கரியின் தோழி
எழுத்தாளர் சிவசங்கரியும் வாணி ஜெயராமும் ஒரே சாயலில் இருப்பார்கள். இவர்கள் இருவரும் இணை பிரியாத நட்பில் உள்ளனர். ஒரு நாள் வாணியுடன் சிவசங்கரி பேசி கொண்டிருந்தாராம். அப்போது உங்களுக்கு வாணி என்ற பெயர் எப்படி வந்தது என கேட்டாராம். அதற்கு முதலில் தயங்கிய வாணி, பின்னர் தொடர்ந்தாராம், நான் இதை சொன்னால் ஏதோ பொய் சொல்கிறேன் என நினைப்பார்கள், நீங்கள் கேட்பதால் நான் சொல்கிறேன் என கூறிய வாணி, தனது குடும்பத்தில் தான் எட்டாவதாக பிறந்தார் என்பதையும் பெற்றோருக்கு தனது பிறப்பால் வருத்தம் இருந்ததாகவும் கூறினார். இதனால் தனக்கு பெயர் கூட வைக்காமல் இருந்தனராம். ஒரு ஜோதிடரிடம் தனது பிறந்த தகவல்களை கூறி ஜாதகம் பார்த்த போது அந்த ஜோசியர் , இந்த பெண் சரஸ்வதியின் அமசம். இவருடைய பெரும் உங்களுக்கு இப்போது தெரியாது, பிற்காலத்தில் தெரியும் என்றாராம். இதையடுத்துதான் தனக்கு கலைவாணி என்ற பெயரை பெற்றோர் வைத்ததாக என்னிடம் வாணி கூறினார் என ஒரு நிகழ்ச்சியில் சிவசங்கரி தெரிவித்திருந்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications