பிக்பாஸ் செட்டுகிட்ட கும்மிருட்டு! என்னை தாக்கியவர் யாருனு கூட பார்க்க முடியல! வலியால் துடித்த வனிதா
சென்னை: மிகவும் வலியாக இருக்கிறது. நான் ஓய்வெடுக்க வேண்டும். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தற்போது அந்த நிகழ்ச்சி 55 நாட்களை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான பிரதீப் ஆண்டனி டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரால் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பிரதீப் ஆண்டனி மீது ஜோவிகாவும் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் ரிவ்யூ செய்த போது ஜோவிகா, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோரின் உரிமைக் குரல் சரியானது என வனிதா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னை பிரதீப் ஆதரவாளர் முகத்தில் தாக்கியதை அறிந்து பலர் போனிலும் சமூகவலைதளங்களிலும் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். பிக்பாஸ் ஷூட்டிங் முடித்துக் கொண்டு வெளியே வந்த போது இரவு நேரத்தில் இருட்டாக இருந்தது.
என்னால் அந்த இடத்தில் சரியாக பார்க்க கூட முடியவில்லை. அது பழமையான கட்டடம், அங்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. ஆனால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. தயவு செய்து வெறுப்பை பரப்பாதீர்கள் என சிலருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அன்பை பரப்புங்கள். மீடியாக்களும் எனக்கு போன் செய்யாதீர்கள்.

இந்த விஷயத்தை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பேச எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வலி இருக்கிறது. ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் தினமும் பிக்பாஸ் குறித்து ரிவ்யூ கொடுத்து வருகிறேன். அப்போது என் முகத்தை நீங்கள் பார்க்கும் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எனது தாக்கப்பட்ட முகத்தை நான் சமூகவலைதளத்தில் ஷேர் செய்தேன்.
என் முகம் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் உண்மையை சொல்வதிலிருந்து தவிர்க்க முடியாது. என்னை தாக்கியது குறித்து அறிந்ததும் உடனே நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றி. உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நான் குணமாக வேண்டும். என் உடல்நலம் சரியாகும் வரை என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். அன்பை மட்டும் பரப்புங்கள். இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications