சி.ஏ.ஏ. எதிர்ப்பு: சென்னை வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக இரவிலும் தொடரும் போராட்டம்!
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 3-வது நாளாக இன்று இரவிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு நடக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறி உள்ளது. நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

என்ன போராட்டம்
இந்தப் போராட்டம் இரவு வரை வண்ணாரப்பேட்டை பகுதியில் தொடர்ந்த நிலையில், அவர்களை கலைந்துபோகும்படி காவல்துறையினர் வலியுறுத்தினர். இருந்தபோதும் அவர்கள் கலைந்துபோகாத நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அங்கு போலீசார் - இஸ்லாமியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்

என்ன நடந்தது
மிக மோசமாக தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழக முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கோவை, திருப்பூரில் போராட்டங்கள் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது .

தொடர்கிறது
3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போலீஸ் தாக்குதல் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல் வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருப்பூரில் போராட்டம் தொடர்கிறது.இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கிருக்கும் இஸ்லாமியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
|
இப்போது முடியாது
இந்த போராட்டம் இப்போதைக்கு முடியாது என்றும் கூறப்படுகிறது. சட்டசபையில் இது தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வண்ணாரப்பேட்டையில் போராடும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் நடந்த போலீஸ் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இன்று போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வண்ணாரப்பேட்டையில் நடந்த போலீஸ் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இன்றும் போராட்டம் நடைபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னையில் 3-வது நாள் இரவிலும் போராட்டம்
வண்ணாரப்பேட்டையில் இன்று இரவு 3-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications