வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும்நிலையில், ஒவ்வொரு கட்சியிலும் ஏதாவது ஒரு சிக்கல் எழுந்து வருகிறது. அப்படித்தான் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. அதாவது வட மாவட்டங்களில் கட்சியை வளர்க்க இந்த தேர்தலில் வட மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி செய்தால், மேலும் சில சமூகங்களும் பஞ்சாயத்துக்கு வரலாம் என்பதால், காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் உள்ளதாம்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் திமுகவால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த சீட்டை பிரிக்க காங்கிரஸ் கோஷ்டிகள் தயாராகி வருகின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
இந்நிலையில் தான், வட மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை திடீரென எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மயிலாப்பூரில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி இல்லத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
விஷ்ணு பிரசாத்
இந்த கூட்டத்துக்கு அவரது மகனும், கடலூர் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்னு பிரசாத் தலைமை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
வன்னியர்கள் கோரிக்கை
இதனால், இந்த முறை சமூக நீதி அடிப்படையில் கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்னியர் சமூக மக்கள் பரவலாக வசித்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இந்த சமூகத்திற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது அவர்கள் சுட்டிக்காட்டினர். 2026ல் விருதாச்சலம் தொகுதியில் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5 தொகுதி
ஆனால், சமூகத்தின் அளவையும், கட்சிக்கான அவர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு இந்த முறை குறைந்தது 5 தொகுதிகளையாவது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கை உடனடியாக கட்சியின் மேலிடத்திற்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக பிரதிநிதித்துவம்
அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரிடம் கிருஷ்ணசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை விளக்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், இந்த கோரிக்கை குறித்து மேலிடத்தில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஷ்னு பிரசாத் மட்டுமின்றி, மேலும், பல முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ்
இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்குள் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறித்து புதிய விவாதம் உருவாகியுள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை தொகுதி பங்கீடு தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்ற கருத்தும் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரே இறுதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு சில தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
5 தொகுதி கோரிக்கை
இந்த சூழலில், தற்போது வன்னியர் சமூகத்திற்கான 5 தொகுதி கோரிக்கை எழுந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் மேலும் ஒரு புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த கோரிக்கை எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
2026 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகியுள்ள இந்த புதிய கோரிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவம் என்ற விவகாரம் வந்துள்ளதால், கட்சியின் முடிவு மேலும், சில சிக்கலளை உருவாக்கலாம் என சில சீனியர்கள் கருதுகின்றனர். ஒருவேளை அப்படி செய்தால், மேலும் சில சமூகங்களும் பஞ்சாயத்துக்கு வரலாம் என்பதால், காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் உள்ளதாம்.
-
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
மனோஜ் பாண்டியன் vs அப்பாவு.. ராதாபுரம் தொகுதியில் களமிறங்கும் பனங்காட்டுப்படை.. சைலண்டான ஹரி நாடார்! -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!












Click it and Unblock the Notifications