பாஜகவினருக்கு செக்கோ செக்.. பாயிண்டை பிடித்த வன்னியரசு! வாஜ்பாயே சாமி சிலைக்கு தடை விதிச்சாராம்
சென்னை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்களின்போது மத கடவுள்களின் படங்கள், சிலைகளும் வைக்கக்கூடாது என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றறிக்கை வெளியிட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில் வன்னியரசு இது குறித்து விளக்கம் கொடுத்து உள்ளார்.
சுற்றறிக்கை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வெளியிட்டதாக ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எதிர்வரும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த ஒரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம் / சிலை வடிவில் பயன்படுத்தக் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி புகைப்படம் / சிலைகள் இருப்பின் எதிர்கால பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றி விட இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "திமுக ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை! ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்வில் ஹிந்துக் கடவுள்களின் படங்கள் தான் இடம் பெறுமேயன்றி வேறு எந்த மதத்தை சார்ந்த புகைப்படம் பயன்படுத்தப்படும்?
பாஜக கண்டனம்: தமிழகத்தின் ஒவ்வொரு கட்டிடமும் பூமி பூஜை செய்தே கட்டப்பட்டவை என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் நோயாளிகளும், மருத்துவர்களும் சாமியை கும்பிட்டு விட்டே நலம் பெறுவார்கள் என நம்பிக்கையோடு சிகிச்சை பெறுகின்றனர் அல்லது அளிக்கின்றனர் என்பதை அரசு உணர வேண்டும். சாமி படம் இருப்பின் எதிர்கால பிரச்சினைகள் என்ன நேரிடும் என அரசு விளக்க வேண்டும்.
இன்று படங்களை, சிலைகளை அகற்ற சொல்லும் அரசு, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட தைரியம் உள்ளதா? சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓட்டுக்காக இது போன்ற மலிவான செயல்களில் ஈடுபட்டு, மருத்துவர்களின், நோயாளிகளின், பொது மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கிருஸ்துவ மத பிரச்சாரகர்கள் அனைத்து வார்டுகளிலும் சென்று மத பிரச்சாரம் மற்றும் மத மாற்றத்தில் ஈடுபடுவதை என்றேனும் இந்த ஹிந்து விரோத அரசு எதிர்த்துள்ளதா? என்பதை விளக்க வேண்டும். அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வதே மத சார்பற்ற அரசு என்பதற்கு பொருள்; மாறாக, ஒரு மதத்தை அழிக்க நினைப்பது, வசைபாடுவது என்பது மதவாத அரசாகவே கருதப்படும். இந்த சுற்றறிக்கையினை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையினர் திரும்பப் பெற வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, "எச்சரிக்கை! ஆயுத பூஜை விழா வரும் 23 ம் தேதி கொண்டாடுவதையொட்டி பாஜக உள்ளிட்ட சங்பரிவாரக்கும்பல் தமிழ்நாட்டில் RSS அணிவகுப்பு ஒரு பக்கம் நடத்துகிறது. மறுபக்கம் அரசு அலுவலகங்களில் மத கடவுளர்கள் படங்களை வைத்து வழிபட அச்சுறுத்துகின்றனர். மதச்சார்பற்ற அரசு என்றால், அரசு அலுவலகங்களில் எந்த வழிபாடும் பூஜையும் செய்யக்கூடாது. ஆனால், பல அலுவலகங்களில் இது தொடர்ந்து நடத்தப்படுவதால் 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அ்ரசாணை ஒன்று போடப்பட்டது.
அந்த அரசாணையில் அரசு அலுவலகங்களில் உள்ள மத அடையாளங்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல,1993 ஆம் ஆண்டு திரு.வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சியிலும் இதே உத்தரவை ஒன்றிய பாஜக அரசே பிறப்பித்தது. அந்த உத்தரவை மேற்கோள் காட்டி ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் மத வழிபாடு கூடாது என்றும் மத அடையாளங்களை அகற்ற வேண்டுமெனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தலைமை செயலாளர் திரு.ஹரி பாஸ்கர் அவர்கள் இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார். 2014 ஆம் ஆண்டிலும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.ராமானுஜம் அவர்கள் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு அலுவலகங்களில் மத வழிபாடு கூடாது என்பது தான். உண்மை இப்படி இருக்க, தமிழ்நாட்டில் உள்ள பாஜக உள்ளிட்ட சங்பரிவாரக்கும்பல் மத வெறியை தூண்டும் வகையில் ஆயுத பூஜையை பயன்படுத்த பார்க்கிறது.
இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது. உடனடியாக, அரசு அலுவலகங்களில் மத வழிபாடோ, பூஜைகளோ கூடாது என மீண்டும் அரசாணை பிறப்பிக்க வேண்டும். காவல்துறை இயக்குனரும் காவல்நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications