விஏஓ கறார்.. சுப்ரீம் கோர்ட் சபாஷ் தீர்ப்பு.. அரசு பணிக்காக மதம் மாறியோர் மீது நடவடிக்கை தேவை: பாஜக
சென்னை: கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடிப்பவரை அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. இந்நிலையில், அரசுப் பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மிக முக்கிய கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர், தன்னுடைய தந்தை இந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால், தான் ஒரு இந்து என்றும் கூறி பட்டியலின சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். புதுச்சேரியில் அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர், தன்னுடைய தந்தை இந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால், தான் ஒரு இந்து என்றும் கூறி பட்டியலின சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில், அவரது தந்தை உட்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரியவந்தது. இதனையடுத்து பட்டியலின சான்றிதழ் வழங்க வி.ஏ.ஓ மறுத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட், மனுதாரர் சிறு வயது முதல் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளதால், சலுகையை பெறுவதற்கான சான்றிதழை கோரியதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இடஒதுக்கீடு: இதனை எதிர்த்து செல்வராணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், நம்பிக்கையின்றி இடஒதுக்கீடு பலன்களை பெற மதம் மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடிப்பவரை அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், இதை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக, அரசுப் பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக கோரிக்கை: இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் பாதிக்கப்படுபவர்களை கை தூக்கி விடுவதற்காகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.
ஆனால், "எங்கள் மதத்தில் ஜாதிகளே இல்லை" என்று கூறி மதம் மாற்றுபவர்கள் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மதம் மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள் கூட, இந்து பட்டியலினத்தவர் என்று சான்றிதழ் பெற்றுக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால், உண்மையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அரசு வேலைக்காக மதம் மாறுவது மோசடி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
சென்னை மேயர் தேர்தலிலும், பல்வேறு சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் மீது சர்ச்சை எழுந்தது.
அரசு பணிகள்: இது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்" என்று ஏஎன்எஸ் பிரசாத் தன்னுடைய அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல, இந்து முன்னணியும் கோரிக்கை விடுத்துள்ளது.. "உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தானாக முன்வந்து தமிழகத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சாதி சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள போலி நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் உண்மையான பட்டியல் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications