"பெட்" கிடைக்கலைன்னு வரதராஜன் வருத்தப்பட்டாரே.. இவருக்குதான்.. சமையல் சக்ரவர்த்தி செல்லப்பா மரணம்!
பிரபல சமையல்கலை நிபுணர் செல்லப்பா கொரோனாவால் உயிரிழந்தார்
சென்னை: புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் செல்லப்பாவின் உயிரை கொரோனா கொண்டு போய்விட்டான்... சென்னை மயிலாப்பூரை சேர்ந்த செல்லப்பா மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் வரதராஜன் ஒரு பிரச்சனையை கொண்டு வெளிப்படுத்தி இருந்தார்.. நெருங்கிய ஒருவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றபோது, அங்கே பெட் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டனர் என்று வீடியோவில் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
அந்த வீடியோ பரபரப்பாக பேசப்பட்டது.. பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.. அதெப்படி பெட் இல்லை என்று சொல்லலாம் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.. தவறான தகவலை பரப்பினால் வழக்கு பாயும் என்ற வார்த்தைகளும் வந்து விழுந்து.. வழக்கும் பின்னாடியே வந்து சேர்ந்தது.

மயிலாப்பூர்
இதற்கு பிறகு என்ன நடந்தது என்பதைவிட, வரதராஜன் பெட் கேட்டாரே அது இந்த செல்லப்பாவுக்குதானாம்.. இவர் மயிலாப்பூரில் வசித்து வந்தார். சமையல் கலை உலகின் சக்கரவர்த்தி.. சமையல் கலைகளில் பிரபலமடைந்த ஒருசிலரில் செல்லப்பாவும் ஒருவர்.

பிரபலம்
எந்த பிரபலம் வீட்டு கல்யாணம் என்றாலும் அங்கு செல்லப்பாவின் சமையல்தான்... ஒரே நாளில் 50 கல்யாண வீட்டில் சமைக்ககூடிய அளவுக்கு இவர் திறமை வாய்ந்தவராம்.. இதுவரை ஒரு கோடி கல்யாணங்களுக்கு மேல் சமைத்து தந்துள்ளார்.. அமைதியான டைப்.. கல்யாண வீடுகளில் செல்லப்பா என்றாலே குஷியாகி விடுவாராம்.. வயிறார சாப்பிட்டு மனசார செல்வார்கள்.

கல்யாணம்
ஒரு கோடிகல்யாணம் நடத்தி வைத்திருக்கிறார் என்றால் எப்படியும் 40 ஆயிரம் பேருக்கு மேல் வேலை தந்திருக்கிறார் என்றே அர்த்தம். சபரிமலையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 3 வேளையும் சாப்பாடு போட்டவர்.. இவருக்கு எப்படி தொற்று பாதித்து என்றே தெரியவில்லை.. இந்த மே மாத ஆரம்பத்தில்கூட அவர் சுறுசுறுப்பாகவும், பிஸியாகவும் இருந்திருக்கிறார்.

புகழ்
வயது முதிர்ந்தவர்களை தாக்கும் என்பதே கொரோனாவின் அடிப்படை தன்மை.. அந்த வகையில் செல்லப்பாவையும் தாக்கி, இறுதியில் காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. இன்று செல்லப்பா இறந்து விட்டார் என்றாலும், அவரது கமகம சமையல் என்றென்றும் மணம்வீசி கொண்டே இருக்கும்!












Click it and Unblock the Notifications