இப்படியா நடக்கணும்? பிசிசிஐக்கு அதிர்ச்சி தந்த தமிழ்நாடு வீரர்.. விரைந்து வந்த டீம்.. ரெடியான சார்ட்
சென்னை: இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருக்கும் முக்கியமான தமிழ்நாடு வீரர் ஒருவருக்கு காயம் காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து ப்ளே ஆப் சுற்று ஆட்டங்கள் நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. சிஎஸ்கே, பெங்களூர், டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு செல்வது உறுதியாகி உள்ளது.
நான்காவதாக செல்லும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக பல்வேறு அணிகள் தீவிரமாக மோதி வருகின்றன. இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருக்கும் இந்திய வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வருகிறார்கள்.

வருண் சக்ரவர்த்தி
அக்சர் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, ரோஹித் சர்மா, கோலி என்று இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். முக்கியமாக கொல்கத்தா அணியில் ஆடி வரும் வருண் சக்ரவர்த்தி இந்திய டி 20 உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கொல்கத்தா அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

கேம் சேஞ்சர்
கொல்கத்தா அணியில் தற்போது வருண்தான் கேம் சேஞ்சராக திகழ்ந்து வருகிறார். இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் இதனால் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வருண் சக்ரவர்த்தி முட்டியில் அடிபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயம்
முன்பே ஏற்பட்ட காயங்கள் காரணமாக இவர் முட்டி மோசமான நிலையில் இருப்பதாக கொல்கத்தா அணி தெரிவித்துள்ளது. அவர் கடுமையான வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறார். அவரை மிக மிக கவனமாகவே ஆட வைத்துக்கொண்டு இருக்கிறோம். இந்திய டி 20 உலகக் கோப்பையில் அவர் ஆட வேண்டும். இதனால் அவரை கவனித்துக் கொண்டு இருக்கிறோம்.
Recommended Video

வலி
அவர் எதிர்காலத்தில் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 100 சதவிகிதம் அவர் பிட்டாக இருக்க வேண்டும் என்றால் அவர் நீண்ட காலம் ரீஹாப் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். மாறாக உலகக் கோப்பை தொடரின் போது அவரின் வலியை கட்டுப்படுத்தும் முயற்சிகளை செய்ய இருக்கிறோம். தற்காலிகமாக வலி ஏற்படாமல் இருக்க அவருக்கு சிகிச்சைகளை அளிக்க இருக்கிறோம்.

பிசிசிஐ டீம்
இவரை கண்காணிக்க பிசிசிஐ டீம் ஒன்று வந்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதோடு கொல்கத்தா அணி நிர்வாகிகள் அவருக்காக ஸ்பெஷல் அட்டவணை ஒன்றை உருவாக்கி உள்ளனர். அவரை எப்படி கண்காணிக்க வேண்டும். எப்படி அணியில் பயன்படுத்த வேண்டும் என்று அட்டவணையை உருவாக்கி உள்ளனர். உலகக் கோப்பை டி 20 தொடரை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களை வகுத்து இருக்கிறோம், என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திட்டம்
இவரின் தற்போதைய உடல்நிலை காரணமாக பிசிசிஐ கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருக்கிறது. பிசிசிஐ திட்டத்தின்படி வருண் சக்ரவர்த்தி உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆடுவார். ஒவ்வொரு போட்டியிலும் அவரின் வலியை கண்காணிக்க, அதில் இருந்து நிவாரணம் அளிக்க தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படும். ஒருவேளை நிலைமை மோசமானால் மட்டும் அவருக்கு பதிலாக 10ம் தேதிக்கு முன்பாக மாற்று வீரர் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications