சூப்பர்.. டெய்லி 150 ஏழைகளுக்கு சாப்பாடு.. வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் அசத்தல்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் என்ற அமைப்பு லாக்டவுனால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னால் ஆன அருமையான உதவியைச் செய்து வருகிறது.
Recommended Video
லாக்டவுனால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது சாமானிய மக்கள்தான். தினசரி வேலைக்குப் போய் சம்பாதித்தால்தான் வயிற்றுப் பாடு என்ற நிலையில் இருப்போர்தான் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்காக பலரும் உதவி வருகின்றன். அப்படி உதவி வருபவர்களை நாம் நம்முடைய வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க ஆசைப்பட்டோம்.

அதன் ஒரு பகுதியாக இதோ ஒரு அருமையான உதவிக் கரத்தை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறோம்.
சென்னையைச் சேர்ந்த வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் என்ற அமைப்பு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது லாக்டவுனால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு சாப்பாடு கொடுத்து உதவுகின்றனர்.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவரான ப. விஜயக்குமார் நமக்கு அனுப்பிய மெயிலில், வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம், தின்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி மற்றும் அம்மா ஆந்திரா மெஸ் இராயப்பேட்டை, உடன் இணைந்து தினமும் தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள ஏழை மக்களுக்கு தினமும் சுமார் 150 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் விஜயக்குமார் நண்பா... மிகப் பெரிய சேவையை செய்றீங்க.. நல்லா பண்ணுங்க.. வாழ்த்துகள்.
எந்த சேவையை விடவும் பெரியது வயிற்று சோறு தருவது. அதை விட பெரிய சேவை இருக்க முடியாது. அந்த வகையில் இந்த சங்கத்தினர் செய்து வரும் இந்த உதவி மிகப் பெரிய சேவை மிகப் பெரிய காரியம். அவர்களை மனதார பாராட்டுகிறோம்.. வாழ்த்துகிறோம்.. இதைப் படிக்கும் நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்தால் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.. செய்த உதவியை எங்களிடமும் சொல்லுங்கள்.. நாங்கள் மற்றவர்களிடம் கொண்டு அவர்களையும் ஊக்கப்படுத்துகிறோம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications