ஆமா.. நீங்க சொல்வது உண்மைதான்.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிரித்தபடி பதிலடி கொடுத்த வசந்தகுமார்
சென்னை: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கடைகளில், வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் வசந்தகுமார்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், தொழிலதிபரான வசந்தகுமாரின் கடைகளில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், அங்கும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி வசந்தகுமாரிடம், நிருபர்கள் கேட்டபோது மிகவும் கேஷுவலாக சிரித்தபடி பதிலடி கொடுத்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது உண்மைதான். எனது கடைகளில் பணப்புழக்கம் இருக்கத்தான் செய்கிறது. நான் பொருட்களை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதில்லை. பணம் பெற்றுக்கொண்டு தான் பொருட்களை வழங்குவது வழக்கம். எனவே எனது கடைகளில் கண்டிப்பாக பணப்புழக்கம் இருக்கத்தான் செய்யும்.
மற்றபடி வருமானவரித்துறை சோதனைகளுக்கு நான் கவலைப்படப் போவது கிடையாது. 38 வருடங்களாக முறையாக வருமான வரி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரே நபர் நான்தான். அதுவும் ஆண்டுக்கு ஆண்டு வருமான வரியை அதிகமாக செலுத்திக் கொண்டிருப்பது நான்தான். எனவே மடியில் கனமில்லை என்பதால் எனக்கு எந்த பயமும் கிடையாது. இவ்வாறு வசந்தகுமார் பதில் தெரிவித்தார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications