திருமாவளவனா இது? மீம்சுக்கு போட்ட “கமெண்ட்”.. ரணகளமான பேஸ்புக்! “பேசினால் சண்டை வரும் என பயந்து..”
சென்னை: பேஸ்புக்கில் நேற்று வெளியான ஒரு மீம்ஸுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கமெண்ட் செய்த நிலையில் தற்போது அதை நீக்கி இருக்கிறார். அது என்ன கமெண்ட்? ஏன் அதை நீக்கினார்? விரிவாக காண்போம்.
பேஸ்புக்கில் '100% சிரிப்பு இலவசம்' என்ற பக்கம் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறது. அதில் நேற்று ஒரு மீம் வெளியானது. "சண்டைபோட்டு பேசாமல் இருக்கும் காலம் போய், பேசினால் சண்டை வரும் என்று பயந்து பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்." என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலை மீம்ஸ் நேற்று சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. 1,600 க்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளார்கள். 450க்கும் மேற்பட்டோர் இதனை பகிர்ந்து இருக்கின்றனர். இதில் ஏராளமானோர் கமெண்ட் செய்து இருந்தாலும், அதில் வந்த ஒரு கமெண்ட்தான் ஹைலைட்டான விசயமாக மாறியது.
அதுதான் திருமாவளவன் வெளியிட்ட கமெண்ட். ஆம், திருமாவளவனேதான். ப்ளூ டிக் கொண்ட அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் இருந்து திருமாவளவன் இந்த மீமுக்கு மூன்றே எழுத்துக்களில் செய்த அந்த கமெண்ட் பலரை வியப்படையும், விவாதம் செய்யவும் வைத்து இருக்கிறது. இந்த மீமில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்தை ஆமோதிக்கும் வகையில், "Yes" என ஆங்கிலத்தில் அவர் கமெண்ட் செய்து இருந்தார்.
அதற்கு கீழ் பலரும் வியப்படைந்து திருமாவளவனின் கமெண்டுக்கு பதிலளித்து இருந்தனர். நாகராஜன் என்பவர், "இது கற்பனையா இல்ல கனவா என்று தெரியவில்லை. ஆச்சரியமாக இருக்கு. கமெண்ட்ல தலைவரா" என்று பதிலளித்து இருந்தார். மணி வாசகம் என்பவர், "என்ன அண்ணா கமெண்ட்லாம் பண்றீங்க" என்று கேட்டு இருந்தார்.
எம்கே மணி என்பவர், "அட்மினாக இருக்கலாம்.. தலைவராக இருந்தால் மகிழ்ச்சி.." என்று கருத்திட்டு இருக்கிறார். அப்துல் ஃபயாஸ் என்பவர், "உண்மை தலைவரே" என்றும், நீலகண்டன் என்பவர், "அண்ணா நீங்களா இது?" என வியப்புடன் கேட்டு இருக்கிறார். இதற்கிடையே சிலர் திமுக உடனான கூட்டணியை மறைமுகமாக விமர்சிக்கும் திருமாவளவன் கமெண்ட் செய்துள்ளதாகவும் பதிவிட்டு வந்தனர்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுகவுடன் சற்று உரசல்கள் இருப்பதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன. திமுக அரசின் செயல்பாடுகள் சிலவற்றை சுட்டிக்காட்டி திருமாவளவன், வன்னியரசு போன்றோர்கள் வெளிப்படையாகவே விமர்சிக்கவும் செய்தார்கள்.
குறிப்பாக காவல்துறையின் நடவடிக்கைகள் பலவற்றை திருமாவளவன் கண்டித்து வந்து இருக்கிறார். அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள், திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விரைவில் விலக உள்ளதாக கூறி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி அமைப்பது பற்றி திருமாவளவன்தான் முடிவு செய்ய வேண்டும் என சீமானும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திருமாவளவனின் பேஸ்புக் கமெண்ட் கூட்டணி தொடர்பாக அவர் தெரிவித்ததாகவே புரிந்துகொள்ளப்பட்டது. நள்ளிரவு வரை இருந்த அந்த கமெண்ட் தற்போது பதிவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications