25 வருட கனவு நிறைவேறி உள்ளது.. திமுக, அதிமுகவுக்கு பிறகு விசிக தான்.. திருமாவளவன் நெகிழ்ச்சி!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெற உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விசிக பெற உள்ளது. விசிகவுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க இருக்கிறது.
மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற சட்டப்பேரவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளைப் பெற்று 2 சட்டசபை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும் அல்லது மொத்தமுள்ள தொகுதிகளில் 3 சதவிகித தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, மக்களவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 25 இடங்களுக்கு 1 எம்.பி சீட்டை வென்றிருக்க வேண்டும்.
அப்படி எங்குமே வெற்றி பெறாவிட்டாலும் 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.அந்த வகையில், தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் வென்றதால் விசிகவுக்கு அங்கீகாரம் கிடைக்க உள்ளது. தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மூலமாக விசிக மாநில கட்சி அங்கீகாரத்தை பெற உள்ளது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்கிய, பிரசாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், தொண்டர்கள், தோழமை கட்சிகளைச் சார்ந்த கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
2 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. 1999-ல் இருந்து இந்த இயக்கம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் களத்தில் நாங்கள் பணியாற்றி வந்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
இந்த அங்கீகாரத்தை வழங்கிய சிதம்பரம், விழுப்புரம் மக்களவை தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு அடுத்தபடியாக இன்று மாநில அளவிலான அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுகிற பரிணாமத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடைந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications