"இளையராஜா பாவம்.. அவர்கள் திட்டமே இது தான், ஆனால் எதுவும் நடக்காது.." திருமாவளவன் பரபர அட்டாக்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா புகழ்ந்து பேசி இருந்த நிலையில், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் பாஜக குறித்தும் இளையராஜாவின் கருத்து குறித்தும் தொல். திருமாவளவன் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சங் பரிவார் கும்பல்
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், "இதுவரை அரசியல் ஆதாயத்திற்காக நான் எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை. என்றைக்கும் விளிம்பு நிலை மக்களுக்குப் பாடுபட வேண்டும் என்பதற்காகவே பொறுப்பு உணர்வுடன் முடிவுகளை எடுத்து வருகிறேன். வரும் காலத்திலும் இதைத் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் சங் பரிவார் கும்பல் தூண்டுதல் பேரில் மாணவ சமூகம் பிளவுபட்டு உள்ளது.

இஸ்லாமியர்கள்
இஸ்லாம் சமூகத்திற்குப் பிரச்சினை வரும் போது. அதை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை இஸ்லாமியர்கள் அல்லாத சமூகத்திற்கும் உள்ளது. இஸ்லாமியச் சமூகம் கோபப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் எதிர்வினை ஆற்ற வேண்டும். இவர்களை அம்பலப்படுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும், ஆத்திரப்படக் கூடாது.

பொறுப்பு
சமூகத்தை இரு வேறு துருவங்களாக பிளவுபடுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு நாம் வழி வகுக்கக் கூடாது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர் அல்லாத ஜனநாயக சக்திகளிடம் உள்ளது. சங்பரிவார் கும்பலை எதிர்க்கும் நபர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கிறார்கள். இதை எதிர்கொள்ளக் காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளுக்கே அச்சம் உள்ளது. ஆனால், இவர்களின் அரசியலை அம்பலப்படுத்தும் பொறுப்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளிடம் உள்ளது.

இளையராஜா
சமூகத்தில் யார் மக்களோடு மக்களாக நெருக்கமாக உள்ளனரோ, அவர்களைச் சந்திப்பார்கள். இப்படித் தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவைச் சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அம்பேத்கர் இருந்திருந்தால் நரேந்திர மோடியைப் பாராட்டி இருப்பார் என இளையராஜா சொல்லி இருக்கிறார். இளையராஜா போன்ற நபர்களைக் குறி வைப்பதே அவர்களின் நோக்கம். இளையராஜா பாவம் என்று அவர் மீது இரக்கம் காட்டவே விரும்புகிறேன்.

5 ஆண்டுகள்
அவர் எப்படி விமர்சித்து இருப்பார் எனச் சொல்ல முடியாது. ஆனால், கண்டிப்பாக மோடியை அவரால் சகித்திருக்க முடியாது. அவர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்;. சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர் தான். ஆர்எஸ்எஸ் அரசியலைக் கடைசி வரை மூர்க்கமாக எதிர்த்தவர் தான் அம்பேத்கர்.

தமிழ்நாடு குறி
அவர்கள் இப்போது தமிழ்நாட்டைக் குறிவைத்து விட்டார்கள். இங்கு மாநிலத்தில் இஸ்லாமிய வெறுப்பைத் தீவிரப்படுத்த முயல்கின்றனர். மறுபுறம் கிருத்துவ எதிர்ப்பை கையில் எடுத்து உள்ளனர். விடுதலை சிறுத்தைகளைச் சீண்டினால் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். பாஜக vs விடுதலை சிறுத்தைகள் என்ற அரசியலை முன்னெடுக்க அவர்கள் முயல்கின்றனர். இதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இது சமூக நீதி மண், அவர்களைக் காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்ற கவலையே உள்ளது.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின்
இப்போது இங்குக் கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளனர். ஜெயலலிதா கருணாநிதி என இருவருக்குமான பலத்துடன் பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் வலிமை மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!











Click it and Unblock the Notifications