"தொலைநோக்கு பார்வை.. முற்போக்கு சிந்தனை!" விஜயை பாராட்டி தள்ளிய திருமாவளவன்! ஆஹா இதை நோட் பண்ணுங்க
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் இன்று புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் இந்த கட்சியை அவர் தொடங்கியுள்ளார். நீண்ட காலமாகவே அவர் அரசியலுக்கு வருவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்போது விஜய் GOAT படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து ஒரு படத்தில் மட்டும் அவர் நடிப்பார் எனத் தெரிகிறது. அதன் பிறகு முழுமையாக அரசியலில் இருந்து விலகிவிட்டு அரசியலில் பயணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சி: மேலும், தனது அரசியல் கட்சி தொடர்பாக அவர் 3 பக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் 2024 லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை என்றும் அதில் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் கூறியிருந்தார். இதற்கிடையே விஜய் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பல கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே விஜய் அரசியலை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று தான் நாங்கள் முன்பே கூறியிருந்தோம். ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்ற யாருக்கும் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்குச் சேவை செய்யலாம். அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் விஜய் கட்சி பெயரை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
பாராட்டு: அவரை நம்பி சேரும் ரசிகர் மன்றம் இளைஞர்களுக்கு அவர் நம்பிக்கையாகக் கருத்துகளைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.. அது முக்கியம். அந்த அடிப்படையில் அவர் தனது கருத்துகளைச் சொல்லியுள்ளார். முற்போக்கான பார்வையுடன் அந்த சிந்தனைகள் உள்ளதாக நான் நம்புகிறேன். அதை வரவேற்கிறேன். அவரது தொலைநோக்கு பார்வை முற்போக்காக இருக்கிறது. பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற முழக்கத்துடன் அவர் கூறிய கருத்தை வரவேற்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல்: தொடர்ந்து லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய அவர், "திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. அடுத்து நாளை, நாளை மறுநாள் இடதுசாரிகள் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுக்கும். விசிக அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும். இந்த கூட்டணி 2019 தேர்தல் முதல் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறோம்.
திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.. இந்தியாவில் வேறு எங்கும் ஒரு கூட்டணி இத்தனை காலம் ஒன்றாகப் பயணித்ததே இல்லை. திமுக அணியை எதிர்த்துப் போட்டியிட சக்திமிக்க அணி எதுவும் இல்லை. திமுக அணி பெரிய வெற்றியைப் பெறுவோம். தொகுதிகளைச் சுமுகமாகப் பங்கிட்டுக் கொள்வோம்.. கூட்டணியில் நிறையக் கட்சிகள் இருப்பதால் அதையும் கருத்தில் கொண்டு தொகுதிகளைக் கேட்போம்" என்று கூறினார்.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications