மக்களின் குரலாக சிவகார்த்திகேயன்! ‛மாவீரன்’ படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவன்! ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛மாவீரன்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மக்களின் குரலாக சிவகார்த்திகேயனின் படம் இருப்பதாக பாராட்டி தள்ளிய நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில் ‛மாவீரன்' திரைப்படம் உருவாகி தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கருடன் சேர்ந்து சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளபட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் வழக்கம்போல் காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் ஹவுசிங் போர்ட்டில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் அரசியல் பின்புலத்துடனம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் படம் அரசியல் பேசுவதாகவும் சிலர் தெரிவித்தனர்.
ஆனால் இயக்குனர் மடோன் அஸ்வின், இது ஒரு பேண்டஸி படம் தான். இது அரசியல் சார்ந்த திரைப்படம் இல்லை. இதனை அனைவரும் பார்க்கலாம். தற்போதைய பிரச்சனை பற்றி இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளோம். இதனை நல்ல கருத்தாக மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் பார்த்தார். படம் பார்த்து வெளியே வந்த தொல் திருமாவளவன் மாவீரன் திரைப்படத்தை மனம் திறந்து பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் கூறுகையில், ‛‛மக்களின குரலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் உள்ளது. சென்னை புறநகரில் குடியமர்த்தப்படும் மக்களுக்கு தரப்படும் வீடுகளின் தரம் பற்றி படம் பேசுகிறது'' என பாராட்டி உள்ளார். இதன்மூலம் மாவீரன் திரைப்படத்தில் ஹவுசிங் போர்ட் பிரச்சனை தொடர்பாக இடம் பெற்றது போல் இன்றும் கூட சென்னை புறநகரில் மக்களுக்காக கட்டி கொடுக்கப்படும் வீடுகளில் உள்ளது என்பதை தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications