திமுகவிடம் 15 தொகுதிகளை கேட்ட விசிக? கொளுத்தி போட்ட நயினார் நாகேந்திரன்.. வன்னி அரசு பதிலால் ஷாக்!
சென்னை: திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்த நிலையில், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பதில் அளித்துள்ளார். தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்து வருகிறது. இதனிடையே பாஜக தலைவர்கள், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வருகின்றனர்.

திருமாவளவன் - வைகை செல்வன் சந்திப்பு
அதற்கேற்ப அதிமுக தலைவர் வைகை செல்வனை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்திருந்தார். ஆனாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இணையாது என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வன்னி அரசு பேட்டி
இந்த நிலையில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். அதேபோல் திமுக அணியில் ஏன் விசிக தொடர்கிறது என்பதையும் திருமாவளவன் விளக்கி இருக்கிறார். அதிமுக பக்கம் ஏன் போகக் கூடாது என்று பலரும் கேள்வி கேட்டதால், தான் பாஜக இருக்கிறது என்பதை கூறினார்.
பாமக, பாஜக விவகாரம்
விசிகவுக்கு கூட்டணி வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே கொள்கை கூட்டணியாக திமுகவுடன் இருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கிய பங்கு விசிகவுக்கும் உள்ளது. சீட் பேரத்திற்காக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால் அது விசிகவுக்கு தேவையில்லை. எங்களுக்கு வேறு கட்சியை நாடி செல்ல வேண்டிய தேவை இல்லை.
வருத்தம்
இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது வருத்தம் தான். இம்முறை கூடுதல் தொகுதிகளை பெறுவது அனைவரின் விருப்பம். எங்களுக்கு 50 தொகுதிகளில் கூட போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
நயினார் நாகேந்திரனுக்கு பதில்
ஆனால் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்பின்னரே எங்களுக்கு தெரிய வரும். அதனால் கூட்டணி, எண்ணிக்கை தொடர்பாக திருமாவளவன் பேச்சுவார்த்தை செய்து கொள்வார். நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து 15 தொகுதிகளை விசிக கேட்பதாக தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 15 தொகுதிகள் என்று நயினார் நாகேந்திரன் சொல்வதே எங்களை குறைத்து மதிப்பிடுவதாக பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
-
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications