2022 நினைவுகள்: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை ஆஃப் செய்த திருமா! 2022ல் அவரது செயல்பாடுகளுக்கு எத்தனை மார்க்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆரம்பித்து அதனை வெற்றி பெற மக்கள் இயக்கமாக தமிழகம் முழுவதும் வியாபிக்கச் செய்திருக்கிறார் அக்கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன். ஆளுநர் எதிர்ப்பு, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை என 2022 ஆம் ஆண்டில் அவர் செய்த அரசியல் அதிரடிகள் ஏராளம். அது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்போதுள்ள தலித் தலைவர்களில் மிகத் தீவிரமான அரசியல் செய்து வருபவர் தொல் திருமாவளவன். எம்பி எம்எல்ஏ என பல பதவிகளை வகித்த அவர் ஆரம்பத்திற்கு ஒரு அரசு ஊழியர்.

வேதியியல் பட்டதாரியான திருமாவளவன் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் குற்றவியல் பாடத்தில் முதுகலை பட்டம் படித்துள்ளார். அரசு தடயவியல் துறையில் பணியாற்றிய அவர் அதன் பிறகு அரசியல் செயல்பாடு காரணமாக தனது வேலையை உதறிவிட்டு தேர்தல் அரசியலில் குதித்தார்.

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

1990 ஆம் ஆண்டு தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா கட்சியின் தமிழக தலைவர் மலைச்சாமி மறைவிற்குப் பிறகு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அதன் பின்னர் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். 1999 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டது பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் ஜிகே மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தார். அதன்பிறகு 2001ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து முதன் முறையாக சட்டமன்றத்திற்கு சென்றார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடனும், 2006 ஆம் ஆண்டில் அதிமுகவுடன் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் கூட்டணி வைத்தார்.

கூட்டணி வரலாறு

கூட்டணி வரலாறு

அதைத் தொடர்ந்து மக்கள் நல கூட்டணி, திமுகவுடன் கூட்டணி அரசியல் பயணங்கள் மாறுபட்டதாக இருந்தாலும் அவரது கொள்கையும் முழக்கம் தலித் விடுதலை என்ற ஒன்றை நோக்கியே இருந்தது. பல விமர்சனங்களை சந்தித்தாலும் பல்வேறு விவகாரங்களை தீவிரமாக பணியாற்றுவது அதிரடியான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது திருமாவளவனின் வழக்கம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிலும் அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையிலேயே இருந்திருக்கிறது. ஆளுநர் எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் பேரணி எதிர்ப்பு என மிகத் தீவிரமாக இந்தாண்டு விசிகவை வரலாற்றில் பதிய வைத்திருக்கிறார்.

ஆளுநர் எதிர்ப்பு

ஆளுநர் எதிர்ப்பு

திமுக அரசு பொறுப்பேற்ற சில மாத இடைவேளைக்குப் பிறகு தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதிருந்தே ஆளுநருக்கு திமுகவுக்கும் ஏழாம் பொருத்தம் தான். பல்வேறு மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு விட்டதாக திமுக தொடர்ந்து குற்றம் சாட்டு வருகிறது. அந்த வகையில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கட்சியின் தலைவர் ஆன திருமாவளவன் ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஏழு பேர் விடுதலை விவகாரம், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் ரவியை எதிர்த்து தீவிர விமர்சனங்களை முன்வைப்பவர்களில் திருமாவளவன் முன்னணியில் இருக்கிறார் தற்போது வரை அது தொடர்ந்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் பேரணி

ஆர்எஸ்எஸ் பேரணி

இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பேரணி நடத்த வேண்டும் என முடிவெடுத்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதற்காக தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் நீதிமன்றம் அனுமதி வழங்கிய போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் திருமாவளவனும் ஒருவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனு ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கான அவசியம் என்ன வந்தது? ஏன் ஆர்எஸ்எஸ் இங்கே தனியே பேரணி நடத்த வேண்டும் என மிகக் கடுமையாக விமர்சித்ததோடு அதற்கு தடை கேட்டு பெறுவதற்கு தீவிர முன் முயற்சிகளும் எடுத்தார்.

மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதியில் சாதிய அடக்குமுறைகள் ஏளமாக வியாபித்து இருக்கிறது அவரை தடை செய்ய வேண்டும் என்ற திருமாவளவனின் முழக்கம் இந்தாண்டு போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது. மனு ஸ்மிருதியை தனது கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியதோடு அதில் தனது முன்னுரையையும் இணைத்து இருந்தார் திருமாவளவன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு ஸ்மிருதி நகல்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். களத்தில் இறங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கினார் திருமாவளவன். இதனால் பல இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

மனித சங்கிலி பேரணி

மனித சங்கிலி பேரணி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது மிக முக்கியமானது. இந்த பேரணியில், திருமாவளவன், கீ. வீரமணி, வைகோ, கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தும் என திருமாவளவன் அறிவித்து இதில் விருப்பமுள்ள அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தனர். இது விசிகவின் இந்தாண்டு அரசியல் செயல்பாடுகள் மிக முக்கியமானது ஆகும்.

 உங்கள் பார்வையில்?

உங்கள் பார்வையில்?

மேற்குறிப்பிட்டவை சில சாம்பிள்கள் தான் இது மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், நீட் தேர்வு எதிர்ப்பு, கடலூர் என்எல்சி விவகாரம், ஏழு பேர் விடுதலை, இலங்கைத் தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகள் மெச்சத்தக்கந்த வகையிலேயே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் எழுந்திருப்பது உண்மைதான் எது எப்படி எனும் 2022 ஆம் ஆண்டில் திருமாவளவனின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது உங்கள் கருத்துக்கள் என்ன என்பது குறித்து பதிவு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+