Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதெப்படி ஆளுநர் மனைவியை 'லேடி கவர்னர்' என அழைக்கலாம்? ஆளுநர் ரவிக்கு விசிக வன்னி அரசு கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளை வெளியிடும் ராஜ்பவன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்க பதிவுகளில் அவரது மனைவி திருமதி லட்சுமி ரவி அவர்களை "லேடி கவர்னர்" என குறிப்பிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்து சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மக்களாட்சி கோட்பாடு அடிப்படையில் ஆளுனர் என்பதே தேவையில்லாத ஒரு பதவி என பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளும் விவாதங்களும் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுனர் எதிர்ப்பு என்பது கடவுள் எதிர்ப்பை போலவே கோட்பாட்டு வலிமையாகவே தொடர்கிறது.

 VCK leader Vanni Arasu questions Lady Governor in Tamil Nadu Raj Bhavan Tweets

அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல்பாடு: கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு ஆளுனர் பணி செய்வதற்காக நியமிக்கப்பட்ட திரு.ரவி அவர்கள், வந்த வேலையை மறந்து விட்டு அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். சனாதனம்,குழந்தை திருமணம் குறித்து பெருமை படுவது, ராம ராஜ்யம் அமைப்போம் என்பது, தமிழ்நாட்டை தமிழகமாக சிறுமைப்படுத்துவது என தொடர்கிறது திரு.ரவியின் போக்கு.

 VCK leader Vanni Arasu questions Lady Governor in Tamil Nadu Raj Bhavan Tweets

ஆளுநர் மனைவி லேடி கவர்னரா?: சமீபகாலமாக போகிற இடங்களுக்கெல்லாம் தனது மனைவியையும் அழைத்துச்செல்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், அவருடைய மனைவிக்குமான செலவினங்களும் தமிழ்நாடு அரசையே சாரும். அது கூட பரவாயில்லை. ஆனால்,ஆளுனர் மாளிகை தொடர்ந்து திரு.ரவி அவர்களின் மனைவி திருமதி லட்சுமி ரவி அவர்களை குறிப்பிடும் போது "லேடி கவர்னர்" என குறிப்பிட்டு வருகின்றது. கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்க அரசியலமைப்புச்சட்டம் வழி காட்டியுள்ளதா?

அப்ப மகன், பேரனுக்கு என்ன பதவி?: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மனைவியை "லேடி முதல்வர்" என எந்த மாநிலத்திலாவது அழைக்கிறார்களா? எதற்காக ஆளுனர் மாளிகை இப்படியான மலிவான அரசியலை செய்கிறது? கவர்னரின் மனைவியை
லேடி கவர்னர் என அழைக்கும் ஆளுனர் மாளிகை, அவரது மகனை,பேரனை எப்படி அழைக்கும்? ஆளுனர் மாளிகையின் அதிபுத்திசாலித்தனத்தைக் கண்டு சனநாயகமே சிரிக்கும்.இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+