விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை பெறும் நிலையில் உள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என அக்கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் விசிக அலுவலகத்தில் விருப்பமனுக்களை விநியோகம் செய்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: குறைந்த தொகுதிகளை பெறும் நிலையில் உள்ளோம்.

விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது ஓரிரு நாளில் தெரியும். திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ அது போல் கூட்டணி நலனும் முக்கியம்.
திமுக கூட்டணியிலேயே தவாக வேல்முருகன் நீடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி கிள்ளுக்கீரையாக உள்ளார். போயஸ் கார்டனை நோக்கி வந்த நிலையில் டெல்லிக்கு அதிமுகவினர் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமதாஸ்- சசிகலா கட்சியிடையே புதிதாக அமையவுள்ள கூட்டணிக்கு என் வாழ்த்துகள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள விசிக தங்களுக்கு 10 சீட்டுகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் (2028 தேர்தலில்) கேட்டிருந்தது.
ஆனால் ஒருத்தருக்கு கொடுத்தால் எல்லாரும் கேட்பார்கள் என்பதால் விசிகவிடம் முதல்வர் ஸ்டாலின் சமாதானம் பேசியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் 23 கட்சிகள் கொண்ட கூட்டணியில் எல்லாருக்கும் அதிக இடங்களை கொடுக்க இயலாது என்பதையும் திருமாவளவனிடம் முதல்வர் ஸ்டாலின் அன்புடன் தெரிவித்துள்ளாராம்.
அதனால் திமுகவோ 6 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. மிஞ்சி போனால் 8 இடங்கள் வரை தரலாம் என்கிறார்கள். இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக இடம் பிடித்து பயணித்து வருகிறது.
திமுகவுடனான நட்புறவு, பாஜகவுடனான கொள்கை எதிர்ப்பு என்ற ஒற்றை மந்திரத்தை கொண்டு விசிக பயணித்து வருகிறது. திமுக கூட்டணியில் மிக முக்கிய பங்களிப்பை கொடுக்கும் கட்சியாக விசிக உள்ளது. அக்கட்சிக்கு இரு எம்பிக்கள் உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்ற கட்சி!
திருமாவளவன் எந்த நேரத்திலும் கொள்கை பிடிப்பில் உறுதியாக இருப்பவர். கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் முரணான விஷயங்களுக்கு தனது எதிர்ப்பை காட்டுவார். இதற்கு கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 50 -க்கும் மேற்பட்டோர் இறந்த போது கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த தைரியம் திருமாவளவனுக்கு உண்டு.
அது போல் ஆவண படுகொலை, பட்டியலினத்தோருக்கு எதிரான கொடுமைகள் என எது நடந்தாலும் அந்த விஷயத்தை கையில் எடுப்பார். எல்லாவற்றுக்கும் மேல் அவரது கட்சியின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் விசிக நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அப்படியிருக்கும் போது அக்கட்சியின் கூடுதல் தொகுதி எதிர்பார்ப்பு என்பது நியாயமான ஒன்று! என்றுதான் அனைவரும் கூறுகிறார்கள். அதே வேளையில் திருமாவளவனும் மற்ற கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸின் அணியும் சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகமும் (அஇபுதமமுக) கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகின. நேற்றைய தினம் கூட ராமதாஸும் சசிகலாவும் நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
பாமக ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வர விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் திருமாவளவனின் எதிர்ப்பால் திமுகவும் ராமதாஸுக்கு பிடி கொடுத்து பேசவில்லை என்கிறார்கள். இந்த நிலையில் சசிகலா கட்சியுடன் கூட்டணி வைக்கும் ராமதாஸுக்கும் புதிய கூட்டணிக்கும் தொல் திருமாவளவன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
திருமாவுக்கு போன் போட்ட பிரேமலதா.. கடலூர் விவகாரத்தால் கொந்தளித்த விசிகவினர்.. சர்ச்சையின் பின்னணி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications