சாதி விஷம்.. பாடகர் பிரகாஷ் மீது தாக்குதல்! பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரும் விசிக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பைக்கில் பட்டாசு வாங்கி சென்ற பிரகாஷ் என்ற பாடகரை கொடூரமாக தாக்கியவர்களை சாதிய பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்தி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் வலியுறுத்தி உள்ளார்.

வேங்கைவயல் தொடங்கி பல்வேறு சாதி வெறி கொடூரங்கள், தீண்டாமை குற்றங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கறம்பக்குடி அருகே மோலுடையான்பட்டி‌யில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற பாடகர் பட்டாசு வாங்கிச் சென்றபோது அவரை சாதி வெறியர்கள் வழிமறித்து மது பாட்டிலால் மண்டையை உடைத்ததில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 VCK MLA Sinthanai Selvan demand to arrest attackers of Singer Prakash in Anti terrorist act

இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருந்தது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அந்த அமைப்பு பதிவிட்டு உள்ளதாவது, "தீபாவளி தினத்திலும் தென் மாவட்ட மக்களின் நெஞ்சை உலுக்கும் சாதிய தீண்டாமை சம்பவங்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் பிரகாஷ் பட்டாசு வாங்கிக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற போது மோலுடையான்பட்டி‌, நான்கு ரோட்டின் அருகே கீழ்தொண்டைமான் கிராமத்தில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த சாரதி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து வழிமறித்து இளைஞர் பிரகாஷை சாதிய தீண்டாமை வார்த்தையில் கொச்சையாக பேசி பீர் பாட்டிலால் 15 முறை தலையில் கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் இரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீலம் பண்பாட்டு மையம் செயல்வீரர் முருகானந்தன் உடன் அமைப்பு தோழர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறியும், மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் உள்ளார்கள், தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் அவர்களுக்கும் தகவல் அளித்துள்ளோம்.

நாளை முறையாக மனு அனுப்ப உள்ளோம். சாதி மன நோய் பிடித்த குற்றவாளிகளை SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து உரிய நீதி வழங்கிட வேண்டும். தென் மாவட்டங்களில் தொடரும் பட்டியல் மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமை வன்முறையை தடுக்க தமிழக அரசு, முதலமைச்சர் முக ஸ்டாலின், சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிகளை பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "பாடகர் தம்பி பிரகாஷ் தாக்கப்பட்டதை தொடர்ந்து, புதுகோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினேன்.

மேலும் இது போன்று சாதிய கொடூரங்களை நிகழ்த்தும் சாதி வெறியர்களை வெறும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றவாளிகள் என்ற கோணத்தில் அணுகாமல் அவர்களை சாதிய பயங்கரவாதிகள் என அரசு வகைப்படுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்து அவர்களை கடுமையாக தண்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+