அமெரிக்க மையவாத கட்சி கொள்கையை வரிக்கு வரி கட், பேஸ்ட் செய்த கமல்ஹாசனின் மநீம: ரவிக்குமார் அட்டாக்
சென்னை: அமெரிக்காவின் மையவாத கட்சியின் இணையதளத்தில் இருந்து அதன் கொள்கையை வரிக்கு வரி கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என சாடியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி லோக்சபா எம்.பி. ரவிக்குமார்.
சிவகாசியில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கமல்ஹாசன், கட்சியின் கொள்கைகளை வெளியே சொல்லமாட்டோம்; அதை சொன்னால் பலரும் காப்பி அடித்துவிடுவார்கள் என கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:
கட்சி கொள்கையை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனக் குறிபிடப்பட்டிருப்பவற்றின் அப்பட்டமான காப்பி.

The Centrist Party இன் இணைய தளத்திலிருந்து வரிக்கு வரி கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். Salient points about centrism from the CP perspective என்ற தலைப்பின்கீழ் தரப்பட்டிருக்கும் 3 பாய்ண்ட்டுகளையும் அப்படியே காப்பி எடுத்து centrism என்ற தலைப்பின்கீழ் தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது கமல் கட்சி.
இப்படி காப்பி அடிப்பதற்கு தனக்கு மட்டுமே 'ரைட்' இருக்கிறது. அதுதான் 'காப்பிரைட்' என கமல் நினைத்துக்கொண்டிருக்கிறாரா? இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications