"எல்லாம் கவன ஈர்ப்பு.. உருப்படியான அரசியலை பேசுவதில்லை".. பாஜக மீது திருமாவளவன் விமர்சனம்
சென்னை: பாஜக செய்வது எல்லாம் வெறும் கவன ஈர்ப்பு, அவர்கள் உருப்படியான அரசியலை பேசுவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமாவளவன் விமர்சனம் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல்களில் முறைகேடு நடப்பதாக பாஜக தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. திமுகவினருக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு முறைகேடு நடப்பதாக தமிழ்நாடு பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் ஆளும் கட்சிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் இன்று பதில் அளித்தார்.

எம்பி திருமாவளவன்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு உள்ள சுமார் 2,800 வீடுகளை அகற்ற கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எதிர்ப்பு
வேறு இடங்களுக்கு செல்ல முடியாது, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி மக்கள் போராடி வருகிறார்கள். இதனிடையே அப்பகுதி மக்களை சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் அப்பகுதிக்கு வருகை தந்தனர்.

ஆக்கிரமிப்பு
அப்பகுதியை பார்வையிட்டு, மக்களிடையே குறைகளை கேட்டறிந்த பின்னர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கால் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இங்கு உள்ள மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புறம்போக்கு
தற்போது மேய்ச்சல் புறம்போக்காக உள்ள இடத்தை, மக்கள் வசிக்கும் வகையில் நத்தம் புறம்போக்காக வகைப்படுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். விரைவில் இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜக
கவன ஈர்ப்புக்காக வாயில் வந்ததை எல்லாம் பாஜகவினர் பேசி கொண்டிருக்கின்றனர். பாஜகவினர் உருப்படியான அரசியலை பேசுவதில்லை. தங்களை அனைவரும் கவனிக்க வேண்டும், தங்களை பற்றி விவாதிக்க வேண்டுமென கருதுகின்றனர் என கூறிய அவர், பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி தரப்படும் என அண்ணாமலை கூறியிருப்பது அவரது பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமாவளவன் விமர்சனம் வைத்துள்ளார்.
-
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications