சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவோடு கமல்ஹாசன் கூட்டணியா? தொடக்கத்திலேயே எதிர்க்கும் விசிக

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கூட்டணி அமைக்கலாம் என செய்திகள் வெளியான நிலையில் இந்த முயற்சிகளுக்கு திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தாமே என அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன். அதேநேரத்தில் கூட்டணி தொடர்பாகவும் பேசியும் வருகிறார்.

திமுக-மநீம கூட்டணியா?

திமுக-மநீம கூட்டணியா?

இந்த நிலையில் திமுகவுடன் மநீம கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் கமல்ஹாசனும் சென்னையில் சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின.

மநீமவுக்கு 40 தொகுதிகளா?

மநீமவுக்கு 40 தொகுதிகளா?

மேலும் திமுக அணியில் 40 தொகுதிகளை மநீம கேட்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் அனைத்தும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் அரசியல் களத்தில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

விசிக தொடக்கத்திலேயே எதிர்ப்பு

விசிக தொடக்கத்திலேயே எதிர்ப்பு

மேலும் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம இடம்பெறுவதற்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பாஜக- ரஜினிக்கு போகும்

2019 தேர்தலில் கமல்ஹாசன் வாங்கியவை திமுக எதிர்ப்பு வாக்குகள்.அவர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் அந்த வாக்குகள் பாஜகவுக்கோ/ ரஜினிகாந்த் கட்சிக்கோ போகுமே தவிர திமுகவுக்கு வராது.இதுகூட திமுகவுக்குத் தெரியாது என நினத்து புரளி கிளப்புகிறார்கள், பாவம்!. இவ்வாறு ரவிக்குமார் எழுதியுள்ளார்.

English summary
VCK MP Ravikumar has Opposed to DMK- Kamal Haasan's MNM Alliance for the Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X