திருமாவளவன் முதல்வரானால்.. ரவிக்குமார் எம்பி சொன்னது என்ன?
சென்னை: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும்தான் ஆட்சி செய்து வருகின்றன. கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டாலும், ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டதில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேட்கப்பட்டு வரும் விஷயம்தான். ஆனால், தோழமைக் கட்சிகளுக்கு இதுவரை அந்த கனவு தற்போது வரை நிறைவேற்றப்பட்டதில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட காலம் கழித்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பெரும் விவாதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கிளப்பியிருந்தார். அதன் பிறகு ஸ்டாலின் சந்திப்பு, மது ஒழிப்பு மாநாடு என அனைத்தும் வீரியம் இல்லாமல் மிகச் சாதாரணமாக நடந்து முடிந்துவிட்டன.
அதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை சித்தாந்த எதிரி என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு என்று ஒரு வெடிகுண்டையும் வீசியிருந்தார். இதனால், தமிழக அரசியல் வட்டாரமே களேபரமானது.
மாநாடு நடத்தி முடிக்கப்பட்டும் விஜய் குறித்த விவாதம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையே ஆசை வார்த்தை கூறினால் தாங்கள் வந்துவிடுவோம் என விஜய் நினைப்பதாக கூறியிருந்தார், அவரது கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார் திருமாவளவன். பழனியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நான் அரசியல் களத்திலே அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம், எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது.
அதை அவ்வளவு எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது. நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தேன். நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று சொல்லி இருக்கிறேன். அப்படியென்றால் நானே முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதையே அப்படிச் சொன்னேன்.
தமிழகத்தில் அரசியல் விதிகளை திருத்தக்கூடிய வலிமை பெற்றவர்களாக மாற வேண்டும். தென்னிந்தியா முழுவதும் சிறுத்தை கொடி பறக்கிறது. மகாராஷ்டிராவிலும் இன்று சிறுத்தைக் கொடி பறக்கிறது, மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதற்காக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமனம் செய்துள்ளோம். இந்தியாவிலேயே எந்தக் கட்சியிலும் இவ்வாறு இல்லை. அந்தளவுக்கு துணிச்சலோடு இறங்கி இருக்கிறோம் என்று பேசினார்.
இந்நிலையில், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ரவிகுமார் கூறியதாவது: திருமாவளவன் தேர்தல் அரசியலில் 25 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். அரசியல் பாதையில் 35 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு கட்சியை நிறுவி, அதனை இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக அவர் உருவாக்கி காட்டியிருக்கிறார்.
அத்தகயை ஆளுமைமிக்க தலைவர் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டிற்கு அது நன்மை பயக்கும். எனவே, அப்படி சொல்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
-
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications