விசிக விஜய்க்கு ஆதரவு அளிப்பதில் பெரும் சிக்கல்.. இந்த பாயிண்ட் முக்கியமாச்சே.. ஸ்டாலின் மறைமுக தகவல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நிர்வாகிகள் இன்று மாலை சென்னையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தி முக்கிய முடிவு எடுக்க உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு விசிகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
விசிக தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது அந்தக் கட்சிக்கு அரசியல் தற்கொலைக்கு சமம் என்று அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது.

தலித் வாக்கு வங்கி அபாயம்
ஏற்கனவே விஜய் தலித் வாக்குகளில் பெரும் பகுதியை தன்வசம் ஈர்த்துள்ளார். இப்போது விசிக தவெகவுக்கு ஆதரவு அளித்தால் மீதமுள்ள வாக்குகளும் தவெகவுக்குச் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் விசிகவின் வாக்கு வங்கி முழுமையாகக் கரைந்து விடும் என கண்ணோட்டம் உள்ளது.
திருமாவளவன் இந்த உண்மையை உணராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேவேளையில் விஜய்-க்கு ஆதரவு அளித்தால் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என ஆசை விசிக-விற்கு மட்டும் சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) உள்ளது.
சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வு
17-வது தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் இடம் பெற உள்ளனர். கடந்த சட்டப்பேரவையில் இந்த எண்ணிக்கை 15 ஆக மட்டுமே இருந்த நிலையில், இம்முறை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்த 25 பேரில் 13 பேர் தவெகவைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமான தகவல். தவெக தலைவர் விஜய், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மேரி வில்சன், ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தாஹிரா உள்ளிட்டோர் இதில் அடங்குவர். இந்தப் பின்னணியில் விசிகவின் முடிவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
விஜய் - புஸ்ஸி ஆனந்துடன் தொடர் ஆலோசனை
தவெக தலைவர் விஜய் இன்று தனது நீலாங்கரை இல்லத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினார். எம்எல்ஏக்களுடன் நடத்திய விவாதத்துக்குப் பிறகு அவர் பட்டினம்பாக்கம் இல்லத்துக்கு சென்றுள்ளார்.
இந்தச் சந்திப்புகள் தவெகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால் விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் இன்னும் எந்தப் முடிவையும் எடுத்தாக தகவலையும் வெளியிடவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வேறுபட்ட நிலை
கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகியவை இத்தகைய வாக்கு வங்கி இழப்பு அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. எனவே அவை தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிக ஆபத்து இல்லை. ஆனால் விசிகவுக்கு மட்டும் இந்த முடிவு மிகப்பெரிய அரசியல் இழப்பை ஏற்படுத்தும் என கருத்து நிலவி வருகிறது.
இன்றைய விசிக உயர்மட்டக் கூட்டம் என்ன முடிவை எடுக்கும் என்பதைப் பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்தகட்டம் தீர்மானிக்கப்படும். தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், 3 கட்சிகளளும் ஆதரவு அளித்தால்.. சி.ஜோசப் விஜய் என்னும் நான்!
ஸ்டாலின் சொன்ன மறைமுக செய்தி
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் "அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் திமுகவிற்கு 'ஓகே' தான்" என்று ஸ்டாலின் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.















Click it and Unblock the Notifications