#BoosterVaccine.. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி.. திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என திருமாவளவன் மனு அளித்துள்ளார்
சென்னை: ஒமிக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளார்.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம், ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் மறுபக்கமும் படுவேகமாக பரவி வருகிறது...
எனவே, ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்று டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

திருமாவளவன்
இந்த நிலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் கடிதம் அளித்துள்ளார்.. அந்த கடிதத்தில்உள்ளதாவது: "மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தபடி ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் "சீக்வென்ஸ்" செய்யப்பட்ட கோவிட் மாதிரிகளில் 46% மாதிரிகள் ஓமிக்ரான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இணை நோய்
ஜனவரி 2022 இறுதிக்குள் இந்தியாவில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் புதிய நோய்த்தொற்று இருக்கும் என்று தரவு விஞ்ஞானிகளின் மதிப்பீடு உண்மையாகி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய் உள்ளவர்களுக்கும் "பூஸ்டர் டோஸ்" கொடுக்கலாம் எனப் பிரதமர் அறிவித்துள்ளார். நாங்கள் அதை வரவேற்றாலும், கடந்த டெல்டா அலையின் போது இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதைத் தங்களது கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

தடுப்பூசி
"நாட்டில் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளில் சுமார் 88 சதவிகிதம் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு நிகழ்கின்றன. அவர்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய குழுவாக உள்ளனர்" என்று மத்திய சுகாதார செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு "பூஸ்டர் டோஸ்" கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஒமிக்ரான்
ஓமிக்ரான் நோய்த்தொற்றைத் தடுப்பதில் அதிக வீரியம் உள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசியை "பூஸ்டர் டோஸாக" வழங்க அனுமதிக்குமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்திலும் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.. மத்திய அமைச்சரிடம் தரப்பட்டுள்ள இந்த மனுவானது விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications