"கேட்டுச்சா".. பாஜக வாயே திறக்கலயே.. வேங்கைவயல் விஷயத்தில் ஏன் ஒருத்தரும் கைதாகல? சீறும் திருமாவளவன்
வேங்கைவயல் விவகாரம் குறித்து பாஜக ஏன் வாய் திறக்கவில்லை என கேட்கிறார் திருமாவளவன்
சென்னை: "வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை. அவர்களது பாஷையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் இந்துக்கள் தான்.. ஆனால் அமைதியாக இருக்கிறார்கள்... அவர்கள் தான் சாதியவாதிகள்" என்று விசிக திருமாவளவன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக செயல்பாட்டு அமைப்புகள் கொதித்தெழுந்தனர்.. இந்த விவகாரத்தில், தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கவும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.

விசிக
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.. இதுகுறித்த விசாரணை நடந்தும்கூட, ஒருத்தரும் கைது செய்யப்படவில்லை.. அதனால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 14-ம் தேதி மாற்றியது.. இப்போதைக்கு 60 பேரிடம் இதுகுறித்த விசாரணை நடந்து முடிந்துள்ளது.. விசாரணையில் கிடைக்கும் தகவல்களை முடிந்தவரை அறிவியல் தொழில்நுட்பத்துடன் பொருத்திப் பார்த்து, உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீறிய திருமாவளவன்
மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தையே நடத்தியது.. அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம், "இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானமான செயல், சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம்.... ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே.. அதுதான் என்பது வருத்தம் அளிக்கிறது.. மத்திய மாநில பட்டியலின ஆணையம் உள்ளது. இவை இதுவரை புதுகோட்டை பகுதிக்கு செல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது பிரச்சனை அல்ல, மனித குலத்திற்கே அவமானமான பிரச்சனை இது. இதில் மற்ற அரசியல் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தாது வருத்தத்தை அளிக்கிறது" என்று தன் ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

சாதியவாத முத்திரை
இந்நிலையில், இதே விஷயத்தில் மீண்டும் தன்னுடைய குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் திருமாவளவன்.. செய்தியாளர்களிடம் பேசியபோது, "வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை. அவர்களது பாஷையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் இந்துக்கள் தான்... ஆனால் அமைதியாக இருக்கிறார்கள்... அவர்கள் தான் சாதியவாதிகள். இதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு சாதியவாத முத்திரை குத்துவது திரிபுவாத முயற்சி.

மனிதாபிமானம்
வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது. தமிழக அரசு இதில் உறுதியாக இருந்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சிகளாக இருக்கும் யாரும் இதைப் பற்றி பேசவில்லை. எந்த நோக்கத்திற்காகவோ தெரியவில்லை. யாருக்கு அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே மனிதாபிமானம் இருக்கிறதா இல்லையா என்று ஐயப்படக்கூடிய வகையில் உள்ளது.

ராம்நாத் கோவிந்த்
பட்டியல் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக அமரவைத்தோம் என பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. புதிய குடிநீர்த் தொட்டி கட்டுவதற்கு ஏற்கனவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். பொதுவான குடிநீர்த் தொட்டியில் இருந்தே மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். மக்களுக்கு தனியே குடிநீர்த் தொட்டியைக் கட்டக்கூடாது என்பதை துவக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அண்ணன் திருமா
வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியிருந்தார் நாம் தமிழர் கட்சி சீமான்.. அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில், அரசியல் கட்சிகள் அவ்வளவாக எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே, என்று செய்தியாளர்கள், சீமானிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு சீமான், அதை என் அண்ணன் திருமாவளவன் சொல்லக்கூடாது.. பிறகட்சிகளை குற்றம் சொல்ல இவருக்கு எந்த தகுதியுமில்லை.. ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டே தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.. இந்த சம்பவம் நடந்து 30 நாள் ஆகிறது.. இதுவரையில் காவல்துறையும், சிபிசிஐடியும் ஏன் குற்றவாளிகளை கைது செய்யவில்லை..

சீமான் நறுக்
இந்த விவகாரத்தில் பிற கட்சிகளை குற்றம் சொல்ல திருமாவளவனுக்கு தார்மீக அடிப்படையில் தகுதியில்லை.. அவர் கூட்டணியில் இருக்கும் கட்சி முதல்வரிடம் ஏன்இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போராட்டம் நடத்துவாரா? அல்லது நான் முன்னெடுத்த இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு அவர் எங்களுடன் களத்தில் இதுவரை நின்றாரா? நான் மட்டும் முதலமைச்சராக இருந்திருந்தால், இந்நேரம் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்து ஜெயிலில் அடைத்திருப்பேன்.. பெரியார் மண், சமூக நீதிக்கான மாநிலம் என்று கட்டமைத்திருப்பது எல்லும் இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலை என்று கொந்தளித்து சீமான் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications