விஜய் போட்ட விதை.. தவெக அமைச்சரவை அழைப்பும், திருமாவளவன் ரியாக்ஷனும்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராகியுள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றார்கள். ஆனால் சுமார் 10 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் அதிமுக வேலுமணி, சி.வி சண்முகம் அணியினர் இடம்பெறுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற விசிக, கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தவெக அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றால் எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என கம்யூனிஸ்ட்கள் கூறினர். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்களுக்கு தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடி அழைப்பு விடுத்துள்ளார். தவெகவின் அழைப்பு குறித்து திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

விஜய் போட்ட விதை
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், "தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு அழைத்த ஆதவ் அர்ஜுனா நன்றி. அவரின் அழைப்புக்கு மதிப்பு தெரிவிக்கிறோம். இந்த அழைப்பை நிராகரிக்க முடியாது. எல்லோருக்குமானவர் அம்பேத்கர் நூல் விழாவிலேயே விஜய் விசிகவுக்கு வெளிப்படையாக அழைத்தார்.
அது எங்களை அழைத்ததற்கான செய்தியாக தான் பார்த்தோம். அப்போது தவெக கூட்டணியில் இணையும் சூழல் உருவாகவில்லை. வேளச்சேரியில் முதல்வர் விஜய் என்னை நேரில் சந்தித்தபோது அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அழைப்பு விடுத்தார். தவெக கூட்டணியில் நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
திருமாவளவன் முடிவு
தவெக ஆட்சியமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவளித்தோம். அமைச்சரவையில் பங்கு கொடுத்தால் தான் ஆதரவு என்பதில் உடன்பாடில்லை. அதனால் நிபந்தனையுடன் ஆதரவளிக்கவில்லை. பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பொருளாளர், முதன்மைசெயலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் அழைப்பு குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம்.
முன்பு கம்யூனிஸ்ட்கள் எடுத்த அதே நிலைப்பாட்டை எடுத்தோம் இப்போது அவர்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதால், ஏன் முடிவு செய்யவில்லை என்று எங்கள் கட்சியினர் கேள்வி எழுப்பக் கூடும். அதனால் தவெகவின் அழைப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்" என்றார்.
-
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன?











Click it and Unblock the Notifications