விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்! திருமாவளவன், தினகரன் ஆழ்ந்த இரங்கல்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒவ்வொரு நாளும் பேரதிர்ச்சியை தரக் கூடியதாக இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப்புக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சென்னை மண்ணடி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமது யூசுப் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் தமது இரங்கல் செய்தியில், விசிக மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீரவணக்கம் என கூறியுள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடன் இலகுவாக பழக கூடிய,நல்ல பண்பாளரான முஹம்மது யூசுப் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்,கட்சியினர்,நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரின் குடும்பத்திற்கு மன அமைதியை தந்தருள பிரார்த்திக்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. முகமது யூசுப் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். இனிமையாகப் பழகி, எல்லோரிடமும் நட்பு பாராட்டக்கூடிய திரு. யூசுப் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், வி.சி.க தலைவர் அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும், அக்கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. இரங்கல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு.முகமது யூசுப். அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல். திருமாவளவன்.MP அவர்களுக்கு அணுக்கத் தொண்டராகவும், தோழராகவும் இருந்து தோளோடு தோள் நின்று களப்பணியாற்றிய அவரது இழப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும், திரு.திருமாவளவன்.எம்பி. உள்ளிட்ட கட்சியின் தோழர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட இரங்கல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அன்புச்சகோதரர் முகமது யூசுப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்ணன் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிக உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications