நக்குற மாடுகளால் மேய்ந்திட முடியாது.. விமர்சகர்களை விளாசிய வன்னி அரசு.. ஆதவ் அர்ஜுனா கொடுத்த பதில்!
சென்னை: விசிகவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வரும் நிலையில், இதுதொடர்பாக விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ரிப்ளை கொடுத்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூன் நியமிக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அண்மையில் அறிவித்தார். பல்வேறு வழக்குகளில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன்தான் ஆதவ் அர்ஜூன். அவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் பொதுத் தொகுதியில் சீட் கொடுக்கப்பட உள்ளதாகவும் பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிகவில் முக்கிய பதவி: முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன், தற்போது தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் விசிகவில் இணைந்து முக்கியமான பொறுப்பை பெற்றுள்ளார்.
வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of Common) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜூனா, கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அண்மையில் திருச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்ட விசிக மாநாட்டையும் ஆதவ் அர்ஜுன் தான் ஒருங்கிணைத்தார். விசிக மாநாடு முடிந்த அடுத்த சில வாரங்களில் ஆதவ் அர்ஜுனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
விசிகவின் துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுன் நியமிக்கப்பட்டதுமே, ஏராளமானோர் சமூக வலைதளங்களில் விமர்சனக் கணைகளை ஏவினர். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனுக்கு எதன் அடிப்படையில் இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கப்படுகிறது, சீட்டுக்காக பணம் கைமாறியதா என பகீர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.
வன்னி அரசு போட்ட பதிவு: இந்நிலையில், விசிக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் ஒவ்வொரு முடிவுகளை அறிவிக்கும் போதும் உதிரிகளும் எதிரிகளும் வன்மத்தை கக்கி வருவதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அறிவித்தவுடன் அந்த வன்மத்தர்கள் வழக்கத்தை விட அவதூறு பரப்பி வருகிறார்கள். இதன் நோக்கம், அர்ஜூன் போன்ற தலித் அல்லாத இளைஞர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து, கட்சியையும் தலைமையையும் வலிமைப்படுத்தி விடக்கூடாது என்பதே அதன் உள்நோக்கமாக உள்ளது.
"தலித் தலைமையை நிறுவுவோம்" என 90களின் தொடக்கத்தில் எழுச்சித் தமிழர் முழங்கினார். இன்று அந்த முழக்கம் செயல் வடிவமாகி வருவது கண்டு தலித் விரோதிகளும் தலித் உதிரிகளும் பாவம் பொருமுகின்றனர். அந்த பொருமலின் புகைச்சலே இந்த அவதூறு பரப்புரை. விடுதலைச் சிறுத்தைகள் மீது பொதுச்சமூகம் அங்குலம் அங்குலமாக நம்பிக்கை வைத்து வருவதை 'நக்குற மாடுகளால்' ஒன்றும் மேய்ந்திட முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா ரிப்ளை: வன்னி அரசுவின் பதிவைப் பகிர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா, "நமது கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நம் குடும்ப உறுப்பினருமான தோழர் வன்னி அரசு அவர்களின் அன்பு நிறைந்த வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி. சமத்துவத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் இந்த நீண்ட அரசியல் பயணத்தை நாம் இணைந்து மேற்கொள்வோம்.
ஆதிக்க எதிர்ப்பு, பாலின சமத்துவம், அதிகாரப் பரவலாக்கல், அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என சமூக அரசியல் பொருளாதார தளங்களில் நமது தலைவர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் தன்னிகரற்ற தலைமையில் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை உருவாக்க நாம் தொடர்ந்து உழைப்போம்.
அரசியல் புரிதலின்றியோ, தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாகவோ சமூக வலைத்தளங்களில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. இந்த நிழல் விமர்சனங்களை புறந்தள்ளி, நிஜத்தில் களத்தில் நாம் இணைந்து ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து விமர்சிப்பவர்கள் தன்னால் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். தலைவர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் நாம் உறுதியாக நடப்போம்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
நான் காங்கிரஸ்காரன்! என்னை எப்படி திருமாவளவன்.. காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமணி! -
“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா -
விசிக வேட்பாளர்களுக்கு 3 தொகுதிகளில் வாக்களிக்க வேண்டாம்.. திருமாவளவனே சொன்ன வார்த்தை.. பின்னணி -
காட்டுமன்னார்கோவிலில் வாபஸ் பெற்றதற்கு திமுக அழுத்தம் காரணமா.. ஆதவ் புகாருக்கு திருமாவளவன் பதில் -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்?












Click it and Unblock the Notifications