முழு மாடு வாங்கி பிரியாணி.. பாஜகபோல் காசுக்கு வந்த கூட்டமில்ல! விசிக மாநாடு - வன்னியரசு நெகிழ்ச்சி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய வெல்லட்டும் ஜனநாயகம் மாநாடு பாஜகவுக்கு முடிவுரை எழுதும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, “மாநாடு என அறிவிப்பார்கள்; மாநாட்டுக்கு ஆட்களை கூட்ட பணம் கொடுப்பதாக சொல்லி அழைப்பார்கள்; உணவுடன் வாகன செலவையும் ஏற்றுக்கொள்வதாக சொல்வார்கள்.50,000 ரூபாய் கொடுத்து விட்டு ஆட்களை கூட்டி வரவில்லை என ரவுடிகளாக மாறி கொலைவெறித் தாக்குவார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பாஜக இப்படித்தான் மாநாடுகளை நடத்துகிறது. அப்போதும் 5,000 அல்லது 10,000 ஆயிரம் கூட மக்களை தேற்ற முடியாது.

ஆனால், நேற்று சனவரி26 அன்று விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய வெல்லும் சனநாயக மாநாடு இந்திய வரலாற்றில் மாநாடு என்றால் என்ன என்பதற்கு புதிய உரையை எழுதியிருக்கிறது. காலை முதலே மாநாட்டை நிரப்பிக்கொண்டிருந்தது மக்கள் கூட்டம். முதல் நாள் இரவே உணவு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். சேலம், தர்மபுரி பகுதிகளில் முழு மாட்டை விலைக்கு வாங்கி பிரியாணி தயாரித்து கொண்டு வந்திருந்தார்கள். கடந்த திசம்பர் 23 அன்று நடத்தவிருந்த மாநாடு மழை வெள்ளத்தால் சனவரி 26 க்கு மாற்றப்பட்டாலும், வாகனங்களை பிடிக்கும் பணி கூடுதலானது.
அவரவர்கள் தயாரித்துக் கொண்டு வந்த உணவை வாகனங்களில் ஏற்றி மதியம், இரவு என இரு வேளை சாப்பிட்டார்கள். மாலை 3 மணியிலிருந்தே திருச்சி நெடுஞ்சாலை சிறுத்தைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மரியாதைக்குரிய கே.எஸ்.அழகிரி அவர்களையும் காங்கிரஸ் பிரமுகர்களையும் அழைத்து வரும் பொறுப்பு எனக்கும் கட்சியின் தலைமை நிலையச்செயலாளர் திரு.தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களிடமும் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
SRM விடுதியிலிருந்து 3 மணிக்கு கிளம்பினோம். 7.30 மணிக்கு தான் மாநாட்டுக்குள் நுழைய முடிந்தது. வழிநெடுக சிறுத்தைகளும் வாகனங்களும் வழிகளை அடைத்துக்கொண்டு சனாதனம் ஒழிப்போம்! சனநாயகம் காப்போம்! என உணர்ச்சி பிழம்போடு முழக்கமிட்டு வந்தனர். அத்தனை பேருடைய உணர்வும் பாஜக எதிர்ப்பாகவே இருந்தது. மேடையும் அத்தகைய உணர்வை எதிரொலித்தது. ஏதோ மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவுக்கு மக்கள் கூட்டம் கள்ளழகரை தரிசிக்க வந்தது போல, எழுச்சித்தமிழரை தரிசிக்க வந்திருந்தனர். கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு வந்தனர்.
இந்த உணர்வுதான் மாநாட்டின் வெற்றி! இந்த உணர்வு தான் சங் பரிவாரக்கும்பலுக்கான எச்சரிக்கை! மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் தலைவர்களின் உரையும் இந்தியாவின் திசை வழிப்போக்கையே தீர்மானிக்கப்போகிறது. எழுச்சித்தமிழர் உரையும் முதல்வரின் உரையும் பாஜகவுக்கு முடிவுரை எழுதப்போகும் முகவுரையாக அமைந்தது.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications