2026ல் திமுகவிடம் 25 தொகுதிகளை கேட்கும் விசிக வன்னியரசு! திருமாவளவனின் "அதிரடி" பதில் இதுதான்!
சென்னை: தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிடம் குறைந்தபட்சம் 25 தொகுதிகள் வரை கேட்போம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு திருமாவளவன் என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
திமுகவிடம் 25 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்பது எங்களை போன்ற தொண்டர்களின் விருப்பம் என வன்னியரசு தெரிவித்துள்ளது, திமுக- விசிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் தொடங்கிய போது யாரும் எம்எல்ஏ, எம்பி ஆக வேண்டும் என கட்சிக்குள் வராதீர்கள்.

அந்த நேரத்தில் இளைஞர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயக்கத்தில் திரண்டனர். ஆனால் இன்று தேர்தல் பாதைக்கு வந்த பிறகு இந்த இயக்கம் வலிமையாக இருக்கிறது. இதனால் குறைந்தபட்சம் இரட்டை இலக்கங்களில் சட்டசபைக்கு விசிகவினர் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இது எங்களுடைய விருப்பம்தான். ஆனால் எத்தனை தொகுதிகளை கேட்க வேண்டும் என்பது திருமாவளவன் முடிவு செய்வார்" என தெரிவித்துள்ளர்.
வன்னியரசின் இந்த தொகுதி கணக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் "25 தொகுதிகள் வேண்டும் என்பது வன்னியரசின் தனிப்பட்ட கருத்து. தவிர அது விசிக நிர்வாகிகளின் விருப்பமும் கூட! கூடுதல் தொகுதிகளில் விசிக போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விரும்புவது இயல்பானதே.
விசிக என்றைக்குமே இத்தனை தொகுதிகள் வேண்டும் என நிபந்தனைகளை முன்கூட்டியே வைத்ததில்லை. முந்தைய தேர்தல்களில் நாங்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட்டிருக்கிறோம். 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணியிலேயே தொடர்போம்" என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக - விசிக இடையே அண்மைக்காலமாக மறைமுகமாக தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டுத்தான் வருகிறது. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் பேசிய பழைய வீடியோ வைரலான போது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.
அந்த வீடியோவில் "தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை இதற்கு முன்பு யார் யார் வலியுறுத்தினார்களோ தெரியாது, ஆனால், 1999 இல் விசிக முதன்முதலில் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த முழக்கமே, '' ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு'' என்பதுதான். அதிகார பகிர்வு வேறு, சீட் பகிர்வு வேறு... அமைச்சரவையில் பகிர்வு வேண்டும் என்பது பவர் ஷேர், கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர். அதிகாரத்தில் இடம் வேண்டும் என்றால் பவர் ஷேர் வேண்டும்" என இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்த நேரத்தில் திருமாவளவன் போட்ட இந்த பதிவு பூதாகரமானது. இந்த நிலையில் மதுவிலக்கு விவகாரத்தில் திருமாவளவன் தீவிரம் காட்டி வந்ததால் திமுகவை எப்படி அணுக போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பூரண மதுவிலக்கு கோரி திருமாவளவன் நடத்திய மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்திருந்தது. இதனால் திமுகவுடன் விசிகவுக்கு நல்ல புரிதல் இல்லாமல் போய்விட்டதா என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகி அதிமுக கூட்டணிக்கு போய்விடும் என்றெல்லாம் கணிக்கப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் சிலரே வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குள் திமுக கூட்டணி உடைந்து அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலக போவதில்லை என்றே திருமாவளவனும் கட்சி நிர்வாகிகளும் கூறி வந்தனர்.
இதனிடையே விசிகவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனன் கூட ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து பேசிய போது அவர் மீது திருமாவளவன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது திமுக நிர்வாகிகளின் மனக்குமுறலாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் பேசுகையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும். எங்கள் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்து போகும் பிற கட்சிகளும் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் வரலாம். அது போல் கூட்டணியில் வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார்.
இது திருமாவளவனுக்கு விஜய்யின் மறைமுக அழைப்பாகவே பார்க்கப்பட்டது. தேர்தலில் வெல்வதற்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் சொல்வதை பலர் கிண்டல் செய்தனர். விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு செல்லும் அளவிற்கு விசிக பலவீனமாக இல்லை என்று திருமாவளவன் மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் திருமாவளவனும் விஜய்யும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் பங்கேற்க மறுத்துவிட்டார். திமுக , திருமாவளவனுக்கு கொடுத்த அழுத்தம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
அந்த விழாவில் பேசிய விஜய்யும், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாகவே பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை, அழுத்தம் கொடுத்தாலும் அடிபணிகிற கட்சி நாங்கள் இல்லை என்றும் திருமாவளவன், விஜய்க்கு பதில் அளித்திருந்தார்.
அதே விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசிய போது , வரும் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என பேசியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடம் இருந்தது.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவரும் கட்சியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை விசிக உயர்த்தி மாவட்ட கிளை கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளை பெற்றால் மட்டுமே உழைத்த உழைப்புக்கு பலன் கிடைத்தது போல் என தொண்டர்கள் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் வைத்து வன்னியரசும் 25 தொகுதிகளை கேட்க அதற்கு தொல் திருமாவளவனும் மறுப்பு பதிலை அளித்துவிட்டார். எனவே இந்த பிரச்சினை இத்துடன் முடிகிறதா, இல்லை அமைச்சர்களோ விசிகவின் முன்னணி நிர்வாகிகளோ யாராவது கருத்து சொல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications