ஜெயலலிதா வீட்டினை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு : தீபா, தீபக் வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க உத்தரவு
வேதா நிலையத்தை தமிழக அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, வீட்டு சாவியை தன்னிடம் ஒப்படைக்க கோரி ஜெ. தீபக்கும், வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ள இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து அதை கையகப்படுத்தி, அந்த தொகை நீதிமன்றத்தில் செலுத்த தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். தீபா, தீபக் ஆகியோரின் வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்ததுடன், அவரது பெயரில் அறக்கட்டளை உருவாக்கி நீதிமன்றத்தில் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தீபா, தீபக் ஆகியோருக்கு கடந்த மே மாத இறுதியில் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, வீட்டு சாவியை தன்னிடம் ஒப்படைக்க கோரி ஜெ. தீபக்கும், வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ள இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து அதை கையகப்படுத்தி, அந்த தொகை நீதிமன்றத்தில் செலுத்த தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்குகளையும் அந்த அமர்விலேயே பட்டியலிடும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரைத்திருந்தார்.
அதன்படி மூன்று வழக்குகளும், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்ட வழக்கை மட்டும் தங்கள் அமர்வில் விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
அதேசமயம், தீபா, தீபக் ஆகியோரின் வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications