சீமானுக்கு எதிராக போராடாதீங்க... நடிகை விஜயலட்சுமி வேண்டுகோளை ஏற்று வீரலட்சுமி போராட்டம் வாபஸ்
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று நடிகை விஜயலட்சுமி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு சீமான் தம்முடன் குடும்பம் நடத்தினார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். பாலியல் ரீதியாக தம்மை பயன்படுத்திவிட்டு சீமான் வேறு பெண்ணை திருமணம் செய்துவிட்டார்; தமக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதும் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு.

விஜயலட்சுமி-சீமான் படங்கள்
அத்துடன் சீமானுடன் இருக்கும் சில படங்கள், சீமான் தொடர்பான வீடியோக்களையும் விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஃபேஸ்புக் பக்கத்தில் நாள்தோறும் சீமானை விமர்ச்சித்து வீடியோ பதிவுகளை விஜயலட்சுமி ரிலீஸ் செய்து வந்தார். சென்னை போலீசிலும் விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அண்மையில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் சர்ச்சை பேச்சுகளை பேசி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சீமானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். மேலும் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மீண்டும் வீரலட்சுமி
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி களம் இறங்குவதாக அறிவித்தார். தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அறிவிப்புகளை வெளியிட்டு போராட்டம் நடத்தி வருபவர் வீரலட்சுமி. அண்மையில் தமக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபருக்கு எதிராக வெளியிட்ட வீடியோவில் கையில் வீச்சரிவாளோடு நின்று அவனோட ஆண் உறுப்பை அறுப்பேன் என ஆவேசமாக பேசியிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் போலீசார் ஆபாச படங்களை அனுப்பிய நபரை கைது செய்தனர்.

சீமானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்
தற்போது நடிகை விஜயலட்சுமிக்கு நீதி கோரி அடுத்த மாதம் 27-ந் தேதி சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவேன் என வீரலட்சுமி அறிவித்தார். வீரலட்சுமியின் போராட்டத்தால் விஜயலட்சுமி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் தற்போது தமது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக வீரலட்சுமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீரலட்சுமி கூறுகையில், நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனடிப்படையில் நமது போராட்டத்தைத் திரும்பப் பெறுகிறோம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications