சென்னை கோயம்பேட்டில்.. உறைந்து நின்ற பெண்கள்.. வேற வழியே இல்லை.. இன்னும் ஒரு வாரத்துக்கு இதான் நிலைமை
சென்னை: தொடர் மழை காரணமாக வரத்து இல்லாமல் இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.. ஆனாலும், காய்கறிகளின் விலைகள் அளவுக்கு அதிகமாக உயர்ந்தபடியே உள்ளன.
தொடர் மழைக்குப் பிறகு சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், வரத்து குறைபாடு காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.
பருவமழை: பருவமழை தமிழகம் முழுவதும் கொட்டி வருகிறது.. அந்தவகையில், சென்னையில் கடந்த 4-ம் தேதி மிக்ஜாம் புயல், புரட்டி எடுத்தது.. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டியது.. அந்த வெள்ளநீர் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், சென்னையில் கடந்த ஒரு வார காலமாகவே காய்கறிகளில் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. புயல் சமயத்தில், போக்குவரத்து முற்றிலுமாக 2 நாட்கள் முடங்கிவிட்டாலும், அடுத்தடுத்து போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பின..
போக்குவரத்து: ஆனாலும், தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால், வரத்து குறைந்தபடியே காணப்பட்டது. எனவே, சந்தைக்கு வரும் காய்கறிகளும் விலை அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு, சென்னைக்கே அனுப்பி வைக்கப்படுவதால், காய்கறிகளின் விலை இன்னும் அதிகரித்துவிட்டது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெட்ரோல் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கத்தரிக்காய்: முருங்கைக்காய் ஒரு கிலோ 120க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60க்கும், கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் கிலோவுக்கு ரூ.20 முதல் 30 வரை கணிசமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.. கடந்த வாரம் ரூ.15க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் இன்று ரூ.50க்கும், ரூ.35க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.60ஆக விலை உயர்ந்துள்ளது.. எனவே, எப்படி பார்த்தாலும், அடுத்த 2 வாரங்களுக்கு இந்த காய்கறி விலை உயர்வு நீடிக்கும் என்கிறார்கள் வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications