பீன்ஸ் பிரச்சினை பண்ணுது.. பீட்ரூட் பிச்சுக்கிட்டு போகுது! காய் விலைய கேட்டாலே தலையே சுத்திருச்சு!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக பீன்ஸ், பீட்ரூட், பெரிய வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை அதிக அளவு உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை கொள்ள செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

குறிப்பாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் விரதம், முருகனுக்கு மாலை அணிவது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவது என விரத காலங்கள் அதிகமாக உள்ளது. இதனால் இறைச்சி நுகர்வு குறைந்து மக்கள் காய்கறிகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள்..
இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும். அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 200 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு. பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் குறைந்தபட்சமாக 35 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல பீட்ரூட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 84 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரம் 100 ரூபாய் வரை விற்பனையான கத்திரிக்காய் தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் கேரட் 90 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 200, ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் முட்டைக்கோஸ் விலை 60 ரூபாய்க்கும், மிளகாய் ₹40க்கும், தக்காளி 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இஞ்சி 180 ரூபாய்க்கும், அதிகபட்சமாக பூண்டு 460 க்கும் விற்பனையாகிறது. சில வாரங்களாக உருளைக்கிழங்கு விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் 80 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிலோ கணக்கில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications