சென்னையில் வீடு தேடி வரும் காய்கறிகள்.. ஆஹா இவ்வளவு கம்மி விலையா? தமிழ்நாடு அரசின் ஸ்மார்ட் முடிவு
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நேற்று 50 வாகனங்களும், இன்று முதல் 150 வாகனங்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரை கிலோ காய்கறி 20 ரூபாய் திட்டம் தமிழ்நாடு அரசு மூலம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

தோட்டக்கலை துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படும். மலிவு விலையில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளன. இன்று மீதம் உள்ள சுரங்கங்கள் திறக்கப்படும். நேரடியாக வீடுகளுக்கு வந்து இவர்கள் காய்கறிகளை விற்பனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்கறிகள் விலை உயர்வு: இன்று காய்கறி வாங்க சென்னை மார்க்கெட் சென்ற மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் காய்கறிகள் சற்று விலை உயர்ந்து உள்ளது.
கனமழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால், காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூ.10 வரை உயர்ந்து உள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.55, தக்காளி ரூ.32, கத்தரிக்காய் ரூ.40, இஞ்சி ரூ.90, அவரை ரூ.50 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வரத்து சீராகி ஓரிரு நாட்களில் காய்கறிகளின் விலை குறையும் என்று வியாபாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். புயல் வெள்ளம் காரணமாக வாகனங்கள் வரவில்லை.
பல சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் போதிய அளவில் வாகனங்கள் வரத்து இல்லை. இதன் காரணமாகவே விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. வரும் நாட்களில் இந்த விலை உயர்வு சீர் செய்யப்படும் என்று வியாபாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு: உதாரணமாக சென்னையில் மின் தடை காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் பல இடங்களில் மின்சாரம் இன்னும் வரவில்லை என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதிக்கு ஏன் மின்சாரம் வரவில்லை.. ஏன் இன்னும் மின் தடை நிலவுகிறது என்று கோரிக்கை வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.
நேற்று இரவில் இருந்தே மக்கள் இந்த கோரிக்கையை வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. சாலையில் இருக்கும் மின்சார பாக்ஸ்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் மின்சாரம் ட்ரிப் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
ஆவின் தட்டுப்பாடு: அதேபோல் சென்னையில் புயல் காரணமாக பல இடங்களில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டீ கடைகளில் கூட போதிய பால் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. பல வீடுகளில் பால் இல்லை. பெரும்பாலான இடங்களில் பால் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
பேருந்துகள் இயக்கம்: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில், சென்னையில் சில இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் சென்னை முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்திருக்கிறது.
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் 80% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மழைநீர் அதிகம் தேங்கியுள்ள மீட்புப்பணிக்காக மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications