இந்தியாவில் வாகன விற்பனை வரலாற்றில் இல்லாத புதிய உச்சம்.. வெளியான அக்டோபர் மாத புள்ளி விவரம்
சென்னை: நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை குறிவைத்து ஜி.எஸ்.டி. குறைப்பு செய்யப்பட்டிருந்தது.இது நன்றாகவே வேலை செய்துள்ளது.. வாகன உற்பத்தியாளர்களுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. பண்டிகை கால விற்பனை சூடுபிடித்ததது.இதன் காரணமாக வரலாறு காணாத புதிய உச்சமாக கடந்த மாதம் மட்டும் 31.50 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாகன விற்பனை ஏறுமுகமாக இருப்பதால் வாகன உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆட்டோமொபைல்களின் தலைநகரம் என்று சென்னையை சொல்லலாம். சென்னையில் தான் இந்தியாவிற்கு பல்வேறு வகையான வாகனங்கள் உற்பத்தி செய்யும் இடமாகவும், ஏற்றுமதி செய்யும் இடமாக இருக்கிறது. ஜிஎஸ்டி குறைப்பால் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இது வாகன உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதுபற்றிய புள்ளி விவரங்களை பார்ப்போம்.

வாகனங்கள் விற்பனை எப்படி
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் பதிவான வாகனங்களின் விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அந்த புள்ளி விவரங்களின் படி, 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள் பதிவாகி உள்ளது. ஆட்டோ விற்பனையை பொறுத்தவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 517 ஆட்டோக்கள் பதிவாகி உள்ளது. 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் விற்பனையாகி உள்ளது. இதேபோல் 73 ஆயிரத்து 577 டிராக்டர்கள் விற்பனையாகி உள்ளது. அதேபோல் 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவாகியுள்ளது.
இருசக்கர வாகன விற்பனை
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 18 லட்சத்து 27 ஆயிரத்து 337 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 120.21 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் அதிகம் பதிவாகி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 735 ஆக இருந்த இருச்சக்கர வாகனங்களின் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது. இது 144.60 சதவீதம் உயர்வு என்று ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சியுடன் புள்ளி விவரங்களை குறிப்பிட்டுள்ளது.
கார்கள், வணிக வாகனங்கள் உற்பத்தி
அதே போல செப்டம்பரில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 369 ஆக இருந்த தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், அக்டோபரில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பரில் 72 ஆயிரத்து 124 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், அக்டோபரில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆகவும் ஏறுமுகம் கண்டுள்ளது. பண்டிகை கால 42 நாட்களில், அதாவது செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் 52 லட்சத்து 38 ஆயிரத்து 401 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சி
ஆனால் இதே அக்டோபர் மாதத்தில் முந்தைய ஆண்டு (2024) 43 லட்சத்து 25 ஆயிரத்து 632 ஆக மட்டுமே இருந்தது. எனவே இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு, தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்ததால் வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு விளக்கம்
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், "ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் வரி குறைப்பு, பண்டிகை காலம் மற்றும் கிராமப்புற மக்களிடம் மறுமலர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் வந்ததால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் அக்டோபர் மாதம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ஆகும். வரவிருக்கும் வாகனங்களின் புதிய மாடல்கள், ஆரோக்கியமான நிதி நிலைமை, நிலையான எரிபொருள் விலை ஆகியவை தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றன" என்று கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications